நிச்சயதார்த்தம் ஒருவரிடமும் திருமணம் மற்றவருடனும் நடந்த சம்பவம்


முதலில் ஒருவரைக் காதலித்து விட்டு,அவருடன் திருமண நிச்சயதார்த்தத்தையும் ஏற்பாடு செய்து விட்டு, அதற்கு சில நாட்களே இருந்த நிலையில் திடீரென தற்செயலாக சந்தித்த ஒருவர் மீது காதல் கொண்டு அவரையே மணந்தும் கொண்டுள்ளார் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த நர்ஸ் ஒருவர்.தனது காதலியின் இந்த திடீர் மாற்றத்தால் வேதனையுற்று ஏமாற்றத்துடன் திரும்பிப் போனார் முதல் காதலர்.

தக்கலை அருகே உள்ள மேக்கா மண்டபம் என்ற பகுதியைச் சேர்ந்தவர் 23 வயதான ஜாஸ்மின் ஷீபா. இவர் ஒரு நர்ஸ். இவரும் அதே பகுதியைச் சேர்ந்த விபின் என்பவரும் காதலித்து வந்தனர். திருமணமும் செய்து கொள்ள முடிவு செய்தனர். இதையடுத்து திருமணத்திற்குத் தேவையான பணத்தை சேர்பப்தற்காக வெளிநாடு போனார் விபின். தனது காதலிக்கு விருப்பமானதையெல்லாம் வாங்கிக் குவித்தார். தினசரி மணிக்கணக்கில் அவருடன் போனிலும் பேசினார்.

எல்லாம் நல்லபடியாகத்தான் போய்க் கொண்டிருந்தது. இந்த நிலையில் திடீரென காதலரை உடனடியாக, வா, எனது வீட்டில் வேறு மாப்பிள்ளை பார்க்கிறார்கள் என்று அழைத்தார் ஷீபா. இதையடுத்து விபின் நாடு திரும்பினார். ஷீபா வீட்டினருடன் பேசி திருமணத்தை முடிவு செய்தனர். 2 நாட்களுக்கு முன்பு நிச்சயதார்த்தம் நடப்பதாகவும் இருந்தது.
ஆனால் 22ம் தேதி திடீரென ஷீபாவைக் காணவில்லை. இதனால் குழம்பிய அவரது குடும்பத்தினர் விபினைத் தொடர்பு கொண்டு கேட்டபோது நானும் ஷீபாவைத்தான் தேடி வருகிறேன் என்றார். இதையடுத்து இரு தரப்பினரும் தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் திருவட்டார் காவல் நிலையத்திற்கு ஆல்பின் ஜோஸ் என்பவருடன் மணக்கோலத்தில் வந்து நின்றார் ஷீபா.

ஆல்பின் ஜோஸ் ரப்பர் பால் வெட்டும் தொழிலாளி ஆவார். விபினைக் காதலித்த ஷீபா, ஆல்பினை மணந்தது ஏன் என்று தெரியாமல் விபினும், ஷீபாவின் குடும்பத்தாரும் குழம்பித் தவித்தனர். அப்போது காவல் நிலையத்தில் வைத்து அனைவருக்கும் புரியும் வகையில், ஆல்பின் ஜோஸ் எனது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்தார். அப்போது அவரைப் பார்த்ததுமே இவர்தான் எனக்குப் பொருத்தமானவர் என்று முடிவு செய்தேன். இவருடன்தான் என்னால் நிம்மதியாக வாழ முடியும் என்று தோன்றியது.

இதனால் விபினை மணப்பதற்குப் பதில் இவரையே மணப்பது என்ற முடிவுக்கு வந்தேன். இதனால் வீட்டை விட்டு வெளியேறி ஆல்பின் ஜோஸை மணந்து கொண்டேன் என்றார்.
இதனால் விபினும், ஷீபாவின் குடும்பத்தாரும் கடும் ஏமாற்றமடைந்தனர். இதையடுத்து அவர்களைப் போலீஸார் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"