கணினியில் உள்ள பைல் வகைகள்



.avi - வீடியோ பைல். விண்டோஸ் மீடியா பிளேயர்

.bmp - பட பைல். பெயின்ட் மற்றும் அடோப் போட்டோ ஷாப் போன்ற படங்களைக் கையாளும் அப்ளிகேஷன்களில் திறந்து பயன்படுத்தலாம்.

.cfg - கான்பிகரேஷன் பைல். இதனைத் திறந்து பயன்படுத்தக் கூடாது.

.dat - டேட்டா அடங்கிய தகவல் பைல். டேட்டாவினைக் கையாளும் எந்த ஒரு அப்ளிகேஷனிலும் இதனைத் திறக்கலாம்.

.doc - டாகுமெண்ட் பைல். வேர்ட் தொகுப்பில் திறந்து பயன்படுத்தலாம்.

.exe - எக்ஸிகியூட்டபிள் பைல் ( Executable File ). புரோகிராம் ஒன்றின் முதன்மையான பைல். இதில் டபுள் கிளிக் செய்தால் அந்த புரோகிராம் இயங்கும்.

.gif - பட பைல். பெயின்ட் மற்றும் அடோப் போட்டோ ஷாப் போன்ற படங்களைக் கையாளும் அப்ளிகேஷன்களில் திறந்து பயன்படுத்தலாம்.

.htm - இணைய தளத்தில் வைக்கப்படும் டாகுமெண்ட். இன்டர்நெட் எக்ஸ்புளோரர் உட்பட எந்த பிரவுசரிலும் இதனைத் திறந்து பயன்படுத்தலாம்.

.html - இணைய தளத்தில் வைக்கப்படும் டாகுமெண்ட். இன்டர்நெட் எக்ஸ்புளோரர் உட்பட எந்த பிரவுசரிலும் இதனைத் திறந்து பயன்படுத்தலாம்.

.ini - டெக்ஸ்ட் கான்பிகர் செய்யக் கூடிய பைல். நோட்பேடில் திறக்கலாம்.

.jpeg/jpg - பட பைல். பெயின்ட் மற்றும் அடோப் போட்டோ ஷாப் போன்ற படங்களைக் கையாளும் அப்ளிகேஷன்களில் திறந்து பயன்படுத்தலாம்.

.mov - மூவி பைல். குயிக் டைம் அப்ளிகேஷனில் திறக்கலாம்.

.mpeg/mpg - வீடியோ பைல். குயிக் டைம் மற்றும் விண் ஆம்ப் புரோகிராம்களில் திறக்கலாம்.

.mp3 - ஆடியோ பைல் விண்டோஸ் மீடியா பிளேயர் மற்றும் விண் ஆம்ப் போன்ற அப்ளிகேஷன்களில் திறக்கலாம்.

.pdf - போர்ட்டபிள் டாகுமெண்ட் பைல். அடோப் ரீடர் போன்ற பி.டி.எப். பைல்களைத் திறக்கும் எந்த சாப்ட்வேர் புரோகிராமிலும் திறக்கலாம்.

.pps - Slide Show பிரசன்டேஷன் பைல். பவர் பாய்ண்ட் புரோகிராமில் திறக்கலாம்.

.ppt - Slide Show பிரசன்டேஷன் பைல். பவர் பாய்ண்ட் புரோகிராமில் திறக்கலாம்.

.sys - சிஸ்டம் பைல். திறக்க வேண்டாமே.

.txt - டெக்ஸ்ட் பைல். நோட்பேடில் திறக்கலாம்.

.wav - ஆடியோ பைல். விண்டோஸ் மீடியா பிளேயர் மற்றும் விண் ஆம்ப் போன்ற ஆடியோ புரோகிராம் களில் திறந்து பயன்படுத்தலாம்.

.xls - ஸ்ப்ரெட் ஷீட் பைல். எக்ஸெல் தொகுப்பில் பயன்படுத்தலாம்.

.zip - சுருக்கப்பட்ட பைல். விண்ஸிப் புரோகிராம் பைல்களை விரித்துக் கொடுக்கும்.


பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"