உலக வரலாற்றில் காண்டம்களின் வளர்ச்சி


காண்டம்,எய்ட்ஸ் என்னும் ஒரு நோய் மனித இனத்தை ஆட்கொள்ளும் வரை , அது ஒரு கருத்தடை சாதனம் மட்டுமே , என்றைக்கு எய்ட்ஸ் மனிதனை நெருங்கியதோ அன்றிலிருந்து இன்று வரை காண்டம்கள் குறித்த விழிப்புணர்வும் அதன் விற்பனையும் விண்ணை முட்டும் அளவுக்கு வளர்ந்திருக்கிறது .ஒரு வருடத்தில் 6 முதல் 8 பில்லியன்கள் வரை உலகலவில் காண்டம்கள் விற்கப்படுவதாக கூறப்படுகிறது.

கி.மு.1200 :
பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பயன்படுத்தப்பட்டு வந்திருப்பதாக பல வரலாற்று ஆசிரியர்களும் குறிப்பிட்டுள்ளனர் . மனித நாகரீக வளர்ச்சியின் மிக முக்கிய காலகட்டமான எகிப்திய நாகரீகத்தில் காண்டம்கள் இடம் பெருவதாக வரலாற்று ஆசிரியர்கள் கருதுகின்றனர் .
மேலும் எகிப்தியர்கள் உடலுறவினால் ஏற்படும் நோய்கள் மற்றும் தொற்றி வியாதிகளிலிருந்து தங்களை காத்துக்கொள்ள காண்டம்களை பயன்படுத்தினர் எனபது மிக சுவாரசியமான தகவல்.

கி.மு.100-200 :
இது தவிர பிரான்சு நாட்டு குகை சிற்பங்களிலும் அக்கால மனிதர்களின் காண்டம் பயன்பாட்டை குறிப்பிடும் சிற்பங்களும் இடம் பெற்றுள்ளது , அச்சிற்பங்ககள் கி.மு.100 ஆம் வருடத்தியவை என்பது குறிப்பிடத்தக்கது. அது குறித்த படம்..

கி.பி.1500 :
கி.பி.1500ஆம் ஆண்டில் இத்தாலி நாட்டை சேர்ந்த GABRILLE FABILLIOS என்பவர் லைனனை உபயோகித்து செய்த காண்டம்கள் , காண்டம்களை மிக பிரபலமடைய செய்தது .அவர் இக்காண்டம்களை பலரிடம் உபயோகிக்க செய்து சந்தையில் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளார் .இன்றைய நவீன காண்டம்களின் தந்தை என்று அவரை அழைக்கலாம்.

கி.பி.1600 :
இவ்வாண்டு வாக்கில் இங்கிலாந்தை ஆண்ட இரண்டாம் சார்லஸ் தனக்கு உடலுறவால் ஏற்படும் தொற்றிலிருந்து தன்னை காத்து கொள்ள ஒரு உபகரணம் வேண்டுமென பிரகடனம் செய்ய , அந்நாட்டின் பிரபல வைத்தியரான காண்டன் என்பவர் ஆட்டின் குடலில் செய்த ஒரு காண்டத்தை வடிவமைத்து தந்தார் . அக்காண்டம் பிற்காலத்தில் நல்ல வரவேற்ப்பை பெற்றதுடன் பல நூறு ஆண்டுகளுக்கு மக்கள் இவ்வகை காண்டம்களையே பயன்படுத்தி வந்துள்ளனர் .

(பழைய காலத்து காண்டம் )
காண்டம் என்ற சொல்லின் பெயர் காரணத்திற்கு , அதை கண்டறிந்த டாகடர் கான்டன் அவர்களின் பெயரே காரணம் என ஒரு கருத்து உள்ளது , அது தவிர லத்தீனின் காண்டஸ் என்னும் சொல்லிலுருந்தும் அப்பெயர் தோன்றியிருக்கலாம் எனவும் ஒரு கருத்து உள்ளது .

கி.பி.1700:
மிருகத்தோலினால் செய்யப்பட்ட காண்டம்கள் எளிதில் விரிவடையும் தன்மையற்றதாக இருந்ததால் , கி.பி.1700 களில் அத்தோலினை பதப்படுத்தி அதனை விரிவடையும் வகையில் உருவாக்கியதுடன் , அவற்றை விற்க விளம்பரங்களும் துண்டுபிரசுரங்களும் தரப்பட்டது.

கி.பி.1800 :
18ஆம் நூற்றாண்டு வாக்கில் காண்டம்களின் தேவை கீழைநாடுகளில் அதிகரிக்க , மிருகத்தோல் தவிர மாற்று ஏற்பாட்டுக்காக விஞ்ஞானிகள் தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டு அக்காலத்தில் அப்போதுதான் கண்டுபிடிக்கப்பட்ட வலைகனைஸ் செய்யப்பட்ட ரப்பரால் உருவாக்கினர் .
இவ்வகை காண்டம்களை குட்இயர் மற்றும் ஹேன்காக் என்ற இருவர் இணைந்து உருவாக்கினர்.( வல்கனைஸ் என்பது ரப்பரை எந்த அளவுக்கு சூடாக்குகிறோமோ அவ்வளவு அதிகமாக அவை விரிவடையும் தன்மை பெரும் என்கிற முறை )

கி.பி.1900 :
19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் உராய்வு எண்ணையுடன் கூடிய ரப்பருக்கு பதிலாக லேட்டக்ஸ் எனப்படும் ஒரு வகை பிளாஸ்டிக் பொருள் காண்டம்களில் பயன்படுத்தப்பட்டது , அதுவே இன்று வரை நாம் பயன்படுத்தும் காண்டம்களில் சேர்க்கப்படுகிறது .

இன்று நாம் உபயோகிக்கும் காண்டம்கள் 1990ஆம் ஆண்டு DUREX நிறுவனத்தின் புதிய தொழில்நுட்பத்தால் தயாரிக்கபடுவது . அத்தொழில் நுட்பம் காண்டம்களின் விலையை மலிவாகவும் , உபயோகிக்க எளிதாகவும் , நம்பகத்தன்மையுடையதாகவும் ஆக்கியது . (அத்தொழில் நுட்பம் குறித்து எழுத இயலாது.. அதை நீங்களே இங்கே பார்க்கலாம் .... http://www.ripnroll.com/headlinenews.htm )

சில சுவாரஸ்யமான தகவல்கள் :
* ஜப்பானியர்கள் அக்காலத்தில் இருவகை காண்டம்களை பயன்படுத்தியுள்ளனர் அதலி ஒன்று ''காவா காட்டா '' இது மெல்லிய வகை தோலினால் செய்யப்பட்டது , மற்றொன்று '' கபூட்டோகோட்டா '' இது கடினமான மிருக கொம்பு அல்லது ஆமையின் ஓட்டினால் செய்யப்படுபவை.

*உலகில் அதிக காண்டம்களை விற்கும் டீயூரக்ஸ் நிறுவனம் 1935ல் தனது சேவையை தொடங்கியது

*இந்தியாவில் காண்டம் வாங்க ஆகும் செலவை விட விபச்சாரியிடம் செல்ல ஆகும் செலவு குறைவு என ஒரு அமெரிக்க கருத்துக்கணிப்பு கூறுகிறது.

*200க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் உலகில் காண்டம்களை உற்பத்தி செய்கின்றன.

*டென்மார்க்கில் காண்டம்களை சுருக்கமாக '' svangerskabsforebyggendemiddel '' என் அழைக்கின்றனர்.

*உலகின் 70 சதவீத பெண்கள் தாங்களாகவே கடைக்கு சென்று காண்டம்களை வாங்குகின்றனர் .

*இங்கிலாந்தில் 20 வயதுக்கும் குறைவானவர்களே அதிக காண்டம்களை வாங்குகின்றனர்.

*எஸ்கிமோக்கள் மீனின் தோலினால் செய்யப்பட்ட காண்டம்களை உபயோகிக்கின்றனர்.

*கத்தோலிக்க கிறித்தவ சபை சில வருடங்கள் முன்பு வரை காண்டம்கள் உபயோகிப்பதை தவறாக அறிவித்திருந்தது , பிறகு எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு ஏற்ப்பட்ட பின் அதனை சில நிபந்தனைகளுடன் மாற்றிக்கொண்டது .

*சமீபத்தில் நடந்து முடிந்த பீஜிங் ஒலிம்பிக் போட்டியில் 4 இலட்சம் காண்டம்கள் இலவசமாக தரப்பட்டது.

*55 மில்லியன் அமெரிக்கர்களில் 4இல் ஒருவருக்கு பாலியல் தொடர்பான நோய் இருப்பதாக ஒரு கருத்துகணிப்பு கூறுகிறது.

*காண்டம்களை எப்போதும் குளிர்ந்த பகுதியில் வைக்க வேண்டுமாம்.

*அமெரிக்காவின் பெட்ரோல் பங்குகள் வருவாயை அதிகரிக்க பங்குடன் அணைந்த விபச்சார விடுதிகளை நடத்தி வந்தது , இப்போது பெட்ரோல் விலை அதிகரிப்பால் வாடிக்கையாளர் வருவாய் குறைகிறதாம் , அதனால் வாடிக்கையாளர்கள் விபச்சாரிகளிடம் செல்ல காண்டம்களை இலவசமாகவும் பெட்ரோல் தள்ளுபடி கூப்பனும் வழங்குகின்றனர்.

*காண்டம்கள் தரும் இயந்திரம் ( வெண்டிங் மிஷின்ஸ்) முதன்முதலில் 1923 ஆம் ஆண்டு போர்ம்ஸ் என்னும் நிறுவனத்தால் தொடங்கப்பட்டது . (இவ்வியந்திரம் உடலுறவை பிரபலப்படுத்தவே முதன்முதலில் தொடங்கப்பட்டதென்பது அந்நிகழ்வை மேலும் சுவாரசியமாக்குகிறது.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"