பணத் தேவைக்காக கற்பை ஏலம் விட்ட மாணவி


ஏழைகளுக்கு வீடுகள் கட்டி தருவதற்காக தனது கற்பை விற்க முனைந்திருக்கிறார் பிரேசிலை சேர்ந்த பெண். பிரேசிலை சேர்ந்த கேத்ரினா மிகிலோரினி என்ற 20 வயதுடைய மாணவி, ஏழைகளுக்கு உதவும் வண்ணம் அவர்களுக்கு வீடுகளைக் கட்டிக் கொடுக்க திட்டமிட்டார். இதற்காக பணம் சேர்க்க அவர் தனது கற்பை ஏலம் விட உள்ளார்.

இவர் தற்போது ஒரு அரசு சாரா அமைப்பை நடத்தி வருகிறார். தற்போது அமைப்பின் வசம் 1,55,000 அமெரிக்க டாலர்கள் நிதி உள்ளது. அமைப்பிற்கு மேலும் பணம் சேர்ப்பதற்காகவே இவ்வாறு விளம்பரம் கொடுத்துள்ளார்.

உடலுறவின்போது, ஆணுறை கட்டாயமாக அணிய வேண்டும் எனவும் கண்டிப்பாக கூறிவிட்டார்.

"இதை நான் வெறும் தொழிலாகவே பார்க்கிறேன். மக்களுக்காக நல்லது செய்ய மட்டும் நிதியைப் பயன்படுத்துவேன். இதற்காக என்னை பாலியல் தொழிலாளி என்று எண்ணி விடாதீர்கள்" என்று ஒரு பத்திரிக்கைக்கு அளித்துள்ள பெட்டியில் தெரிவித்துள்ளார் இந்த புதுமைப் பெண்!

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"