உலகிலேயே மிகப்பெரிய பிரா


உலகிலேயே மிகப்பெரிய மார்புக்கச்சை பிரித்தானியாவில் ஏலத்தில் விடப்பட்டுள்ளது.

மெகா 1360பி அளவுடைய இந்த மார்புக்கச்சை கடந்த ஆண்டு உலகின் மிகப்பெரிய மார்புக்கச்சையாக கின்னஸ் உலக சாதனைப் பதிவேட்டில் இடம்பிடித்தது. இதன்மூலம் உலகப்பிரபல்யம் பெற்றது.

‘ஈபே’ இணையத்தளத்தின் மூலம் ஏலத்தில் விடப்பட்டுள்ள இந்த மார்புக்கச்சைக்கு ஆரம்பகட்டமாக 500 ஸ்ரேலிங் பவுண் விலை குறிப்பிடப்பட்டுள்ளது.

புற்றுநோய் தொடர்பான தொண்டு நிறுவனத்துக்கு நிதி சேகரிப்பதற்காகவே இந்த மார்புக்கச்சையை ஏலத்தில் விடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"