நடிகர் நடிகைகளின் படுக்கை அறை பழக்க வழக்கங்கள்

சிலருக்கு தூங்கும் முன்பு புத்தகம் படித்தாக வேண்டும். சிலருக்கோ இரவு உணவு முடிந்ததும் பழம் சாப்பிட்டால் தான் தூக்கம் வரும். இன்னும் சிலருக்கு ஒரு கப் பால் குடித்தால் தான் தூக்கம் வரும். இப்படிப்பட்ட பழக்க வழக்கங்கள் நடிகர்- நடிகைகளுக்கும் இல்லாமலா போகும். பெட்ரூமுக்கு செல்லும் முன்பு சில நடிகர் நடிகைகளின் பழக்க வழக்கங்கள் இதோ...

விஜய்:-
நிஜத்தில் சாதுவான கேரக்டர் கொண்ட இவர் வீட்டில் குழந்தைகளுடன் விளையாடும் போது மட்டும் செமஜாலியாகி விடுவாராம். தினந்தோறும் இரவு குழந்தைகளுக்கு முத்தம் கொடுத்துவிட்டு தூங்கும் இவர் சூட்டிங்கிற்காக வெளிïர் சென்றிருந்தால் தவறாமல் தனது குழந்தைகளுக்கு போன் செய்துபேசி விடுவாராம்.

நயன்தாரா:-
வீட்டிலும் குழந்தையை போலவே நடந்து கொள்வாராம். இவர் சரியான அம்மா செல்லம். இரவு தூங்க செல்லும்முன் பெட்ரூமில் இருக்கும் கண்ணாடியில் தன் உடல் அழகை சரிபார்த்து கொள்வாராம்.

சூர்யா:-
வீட்டில் தனது மகள் தியாவுடன் நேரத்தை அதிகம் செலவழிக்கும் சூர்யாவுக்கு கடவுள் நம்பிக்கை அதிகம் உண்டு. அதுவும் இரவு உறங்க செல்லும் முன்பு கடவுளை வழிபடாமல் உறங்கமாட்டாராம்.

சினேகா:-
இவரும் அம்மா செல்லம் தான். அம்மாவுக்கு குட் நைட் சொல்லிவிட்டுத்தான் உறங்க செல்வாராம்.

ஸ்ரீகாந்த்:-
முருக பக்தரான இவர் அவரை வழிபட்ட பின்பு தான் உறங்க செல்வார்.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"