தன்னுடன் 'சும்மா' படுத்துத் தூங்க கட்டணம் வசூலிக்கும் இளம் பெண்


நியூயார்க்கைச் சேர்ந்த ஜாக்கி சாமுவேல் என்ற 29 வயது இளம் பெண், வித்தியாசமான ஒரு தொழில் மூலம் பல ஆயிரக்கணக்கான ரூபாயை சம்பாதித்து கலக்கி வருகிறார். செக்ஸ் எதுவும் வைத்துக் கொள்ளாமல், சும்மா கட்டிப் பிடித்தபடி இவருடன் தூங்க அனுமதிக்கிறார். இதற்காக ஒரு கட்டணத்தையும் வசூலிக்கிறார்.

நியூயார்க்கின் ரோசெஸ்டர் பகுதியில் இவர் வசித்து வருகிறார். தனது வீட்டிலிருந்தபடியே இந்த கட்டிப்புடி தூக்க தொழிலை இவர் மேற்கொள்கிறார்.

இவரது வீட்டுக்கு ஞாயிற்றுக்கிழமை போனால் ஒரே கூட்டமாக இருக்கும். காரணம், ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை ஒரு ஆண் அல்லது பெண்ணுடன் கட்டிப்பிடித்தபடி படுத்திருப்பார் ஜாக்கி. ஆனால் செக்ஸ் உறவெல்லாம் கிடையாது. சும்மா கட்டிப்பிடித்தபடி படுத்திருப்பார்கள்.

இவர் ஒரு தொழில்முறை 'கட்லர்' ஆவார். யார் வேண்டுமானாலும் இவரிடம் வந்து போகலாம். அதற்கு ஒரு மணி நேரத்திற்கு கிட்டத்தட்ட ரூ. 3250 வசூலிக்கிறார். கட்டிப்பிடித்தபடியும், தலையைத் தடவிக் கொடுத்தபடியும் இவர் தனது வாடிக்கையாளர்களுடன் படுக்கிறார். சோபா, பெட் என எங்கு வேண்டுமானாலும் வாடிக்கையாளர்கள் படுத்துக் கொள்ளலாமாம். இந்தப் பணத்தை வைத்துத்தான் தனது மகனைப் படிக்க வைத்து வருகிறாராம் ஜாக்கி.

ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட ரூ.15,000 வரை சம்பாதிக்கிறாராம் ஜாக்கி. ஆண்கள்தான் என்றில்லை, பெண்களும் கூட இவரிடம் வருகிறார்களாம். ஒரு வாரத்திற்கு 30 ஆண்கள் வரை இவரிடம் வாடிக்கையாளர்களாக வருகிறார்களாம். அவர்களில் பலர் ஓய்வு பெற்றோர், ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றோர், முதியோர்கள் ஆவர். இளைஞர்களும் கூட வருகிறார்களாம்.

ஆனால் இவர் மீதும் விமர்சனங்கள் பாயாமல் இல்லை. விபச்சாரி என்று சிலர் இவரை வர்ணிக்கிறார்களாம். ஆனால் அந்தப் புகாரை ஜாக்கி நிராகரிக்கிறார். ஒரு மனிதனுக்கு ஆறுதல் தருவதை, அரவணைப்பு தருவதை எப்படி விபச்சாரம் என்று கூற முடியும் என்று இவர் கேட்கிறார்.

மேலும் அவர் கூறுகையில், என்னிடம் வரும் வாடிக்கையாளர்கள் ஒவ்வொருவரும் ஒரு காரணத்தோடு வருகிறார்கள். சிலர் மனைவியை இழந்தவர்கள். இதனால் ஒரு பெண்ணின் வருடலை நாடி வருகிறார்கள். யாருமே தவறாக நடப்பதில்லை. நடக்க முயற்சிப்பதும் இல்லை. சிலருக்கு ஆறுதல் தேவைப்படுகிறது. இதனால் வருகிறார்கள். அமைதி தேடி வருவோர் அதிகம் உள்ளனர்.

திருமணத்தில் பிரச்சினை உள்ளோர், பெண்ணின் அருகாமை தேவைப்படுவோர் என பல தரப்பினரும் வருகிறார்கள். என்ன நடக்கிறது என்ற ஆர்வம் காரணமாக வருவோரும் உள்ளனர் என்றார் ஜாக்கி.

தனது இந்த வித்தியாசத் தொழில் குறித்து ஆன்லைன் மூலம் விளம்பரப்படுத்தி வாடிக்கையாளர்களைக் கவருகிறார் ஜாக்கி.

தனது வீட்டின் எந்தப் பகுதியிலும் வாடிக்கையாளர்களைத் திருப்திப்படுத்த ஜாக்கி தயாராக இருக்கிறார். இருப்பினும் பலரும் அவரது பெட்ரூமில் உள்ள பெரிய டபுள் காட் பெட்டைத்தான் நாடுகிறார்களாம்.

இந்த சேவையின்போது ஜாக்கியின் அந்தரங்க உறுப்புகளைத் தொட வாடிக்கையாளர்களுக்கு அனுமதி கிடையாதாம். மாறாக தோளில் சாய்ந்து கொள்ளலாம், கட்டிபிடித்தபடி படுக்கலாம், கன்னத்தோடு கன்னம் வைத்துக் கொள்ளலாமாம்!

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"