குழந்தைகளை கொன்று பண்ணையில் புதைத்த தாய்


போலந்து நாட்டின் ஹிபோலிடோவோ கிராமத்தை சேர்ந்தவர் பீட்டா (41). இவருடைய கணவர் இறந்து விட்டார். இவர் கருவுற்றிருந்தார். ஆனால், பிரசவம் ஆனதா, குழந்தை

பிறந்ததா என்று தெரியவில்லை. சில நாட்களில் பீட்டா சாதாரணமாக காட்சி அளித்தார். இதனால் சந்தேகம் அடைந்த சமூக சேவகர்கள் போலீசில் புகார் அளித்தனர்.

சந்தேகத்தின் அடிப்படையில் பீட்டாவின் பண்ணையில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது பிறந்து சில நாட்களே ஆன 4 குழந்தைகளின் எலும்பு கூடுகளை போலீசார் கண்டுபிடித்தனர். உடனடியாக பீட்டாவை போலீசார் கைது செய்தனர்.

இதுகுறித்து அரசு வக்கீல் மரியா குடிபா கூறுகையில், கடந்த 1998ம் ஆண்டு முதல் 2012ம் ஆண்டு வரை பீட்டாவுக்கு 8 குழந்தைகள் பிறந்துள்ளன. இப்போது 2 குழந்தைகள் மட்டும்தான் உயிருடன் உள்ளன. 4 குழந்தைகளின் எலும்பு கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 5வது குழந்தையின் சடலத்தை தேடி வருகின்றனர்.

6வது குழந்தையின் கதி என்னவென்று தெரியவில்லை. இறந்த குழந்தைகளுக்கு பீட்டாதான் தாயா என்பதை அறிய மரபணு சோதனை நடத்தப்படும். அத்துடன் மனநல மருத்துவரிடம் அவருக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குழந்தைகளை பீட்டா எதற்காக கொன்றார் என்று தெரியவில்லை ’’ என்றார்.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"