கணவர் போல படுத்து உல்லாசம் அனுபவித்த‌ பக்கத்து வீட்டு இளைஞன்…


சங்கரன்கோவில் அருகே உள்ள திருவேங்கடத்தை அடுத்த அழகாபுரி கிராமத்தை சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மனைவி ராமலட்சுமி (வயது41). இரவு மாரியப்பனும், ராம லட்சுமியும் அருகருகே படுத்து தூங்கி கொண்டு இருந்தனர்.

அப்போது பின் பக்க கதவு திறந்து இருந்ததால், பக்கத்து வீட்டை சேர்ந்த வாலிபர் செல்வராஜ் நைசாக உள்ளே நுழைந்தார். மாரியப்பனின் அருகே படுத்திருந்த ராமலட்சுமியை பார்த்தும் செல்வராஜுக்கு சபலம் ஏற்பட்டது. அவரும் ராமலட்சுமியின் கணவர் போல அருகில் படுத்து ராமலட்சுமியை கட்டி பிடித்து உல்லாசம் அனுபவிக்க தொடங்கினார்.

தூக்க கலக்கத்தில் இருந்த ராமலட்சுமி இருட்டில் முகத்தை சரியாக கவனிக்காமல் கணவர் தானே என்று விட்டு விட்டார். திடீர் என்று சினிமா படத்தில் நகைச்சுவை காட்சியில் வருவது போல, அவரது கணவர் திரும்பி படுத்து தனது கையை மனைவி மீது போட்டுள்ளார். அப்போது தான் அவரது மனைவி கூடுதலாக ஒரு “கை” எங்கிருந்து வருகிறது என்று பார்த்த போது அருகில் கணவர் படுத்து தூங்கி கொண்டு இருந்தது தெரியவந்தது.

உடனடியாக ராமலட்சுமி அலறி அடித்து எழுந்தார். பக்கத்து வீட்டை சேர்ந்த செல்வராஜ் வெளியே ஓட்டம் பிடித்தார். இதுகுறித்து ராமலட்சுமி திருவேங்கடம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் மதிவாணன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய செல்வராஜை தேடி வருகிறார்கள்.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"