நல்ல மார்க் வாங்கினால் பேன்சி டிரஸ்ஸில் வருவதாக கூறி வாக்குறுதியை நிறைவேற்றிய டீச்சர்!


குவாங்ஸி என்ற சீன மாகாணத்தில் உள்ள ஒரு பள்ளியின் ஆசிரியை, மாணவர்களிடம், நீங்கள் அனைவரும் நன்றாகப் படித்து நல்ல மதிப்பெண்களை வாங்கினால், நான் வேலைக்காரப் பெண்கள் அணியும் பேன்சியான டிரஸ்ஸில் வகுப்புக்கு வருவேன் என்று கூறியுள்ளார்.

இதைக் கேட்டு குஷியான மாணவர்கள், கண்டிப்பாக மார்க் வாங்குவோம் என்று உறுதியளித்தனர். சொன்னபடி படிக்கவும் செய்தார்கள். தேர்வில் அத்தனை பேருமே பாஸ், நல்ல மதிப்பெண்ணும் கூட. இதையடுத்து தான் உறுதியளித்தபடி பேன்சியான டிரஸ்ஸில் வகுப்புக்கு வந்தார் ஆசிரியை. லேசான கவர்ச்சியுடன் கூடிய அந்த டிரஸ்ஸில் ஆசிரியையைப் பார்த்த மாணவர்களுக்கு பெருத்த சந்தோஷம். பலர் தங்களது செல்போன் கேமராவில் அதைப் படம் பிடித்து பிளாக்கிலும், இன்டர்நெட்டிலும் போட்டு விட சர்ச்சையாகி விட்டது.

மாணவர்களைப் படிக்க வைக்க ஒரு டீச்சர் இப்படியெல்லாமா கூறுவது என்று சிலர் வரிந்து கட்டிக் கொண்டு கிளம்பி விட்டனர். ஆனால் சிலர், ஆசிரியை தான் நினைத்ததை சாதித்துள்ளார் அல்லவா, மாணவர்களைப் படிக்க வைத்து விட்டாரல்லவா, அதைப் பாருங்கள் என்று ஆசிரியையின் செயலை பாராட்டியுள்ளனராம்.

பூபி வாலிபால் என்று சீனாவில் ஒரு படம் வந்தது. அந்தப் படத்தில் வந்ததைப் போன்றுதான் இந்த ஆசிரியையும் செயல்பட்டுள்ளதாக கருதப்படுகிறது. பூபி வாலிபால் படத்தில், தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட கைப்பந்தாட்ட அணியில் இடம் பெற்றிருந்த வீரர்களை சரிவர பயிற்சி கொடுக்காமல் சிரமப்படுகிறார் அதன் பெண் பயிற்சியாளர். கடைசியில் ஒரு டிரிக் செய்கிறார். நீங்கள் சரியாக ஆடி வெற்றி பெற்றால், எனது மார்புகளை உங்களுக்குக் காட்டுவேன் என்று கூறுவார். அதைக் கேட்டு வீரர்கள் உற்சாகமாகி ஆடி வெற்றி பெறுவார்கள். அதே பாணியில் இந்த ஆசிரியையும் சற்று வித்தியாசமாக உறுதியளித்து சாதித்துள்ளார் என்கிறார்கள்.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"