விண்டோஸின் கூடுதல் பயன்களை பெறுவது எப்படி?



1.பென்சஸ் (Fences) :
உங்கள் மானிட்டரின் திரை முழுவதும் ஐகான்கள் குவிந்து கிடக்கின்றனவா?
சில வேளைகளில் டவுண்லோட் செய்த பைலுக்குரிய ஐகானைக் காண முடியவில்லையா? சிதறிக் கிடப்பதனால் ஒன்றுக்கொன்று தொடர்புடைய பைல்களை அடையாளம் காண முடியவில்லையா?
விண்டோஸ் இயக்கம் இவற்றை வகைப்படுத்தி வைக்கும் வசதியைத் தரவில்லை.இந்தக் குறையை நீக்கும் வகையில் செயல்படுகிறது.
Fences என்னும் இலவச புரோகிராம். ஸ்டார்டாக் என்னும் நிறுவனம் இந்த புரோகிராமினை http://www.stardock.com/products/fences/ என்ற முகவரியில் உள்ள தனது தளத்தில் தருகிறது.
இது உங்கள் ஐகான்களை குழு குழுவாக அமைத்து வேலிகளுக்குள் அமைத்துத் தருகிறது.எனவே மெயில், மூவி, இசைப்பாடல், ஷார்ட் கட்ஸ், கேம்ஸ், இன்னும் சில பிரிவுகளில் வேலி கட்டி ஐகான்களை அதற்குள் வைக்கலாம்.திரையில் காலியாக உள்ள இடத்தில் இருமுறை கிளிக் செய்தால் அனைத்து வேலிகளும் அவற்றின் உள்ள அமைக்கப்பட்டுள்ள ஐகான்களுடன் மறைந்து போகும். மீண்டும் டபுள் கிளிக் கொடுத்தால் அவை அனைத்தும் மீண்டும் காட்டப்படும்.

2. விண்டோஸ் ஆப்டிமம் (Windows Optimum):
இது விண்டோஸ் இயக்கத்தின் அனைத்து வேலைகளையும் கட்டுப்படுத்தும் சக்தியை உங்களுக்குத் தருகிறது.ஒரு பைலை ரீநேம் செய்திட முயற்சிக்கிறீர்கள்; அல்லது அழிக்க கட்டளை கொடுக்கிறீர்கள். உடனே ""பைலை இன்னொரு அப்ளிகேஷன் அல்லது இன்னொருவர் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். எனவே முடியாது'' என்று விண்டோஸ் கூறும் செய்தியைக் காணலாம்.

இந்த புரோகிராம் இந்த தடைகளைத் தகர்க்கிறது.இதன் மூலம் விண்டோஸ் சிஸ்டம் வழங்கும் எந்த ஒரு சர்வீஸையும் நிறுத்தலாம்; ரெஜிஸ்ட்ரியில் உள்ள கீகளை நீக்கலாம்; நீங்கள் அட்மினிஸ்ட்ரேட்டராக லாக் இன் செய்யவில்லை என்றாலும் இந்த புரோகிராம் உங்களுக்கு அந்த அனுமதியைத் தருகிறது. ஒரு பைலைப் பயன்படுத்திக் கொண்டிருந்தாலும், அதனை நீக்கலாம்; "Access denied" "Another application is using the file" என்ற செய்தி எல்லாம் இனிமேல் வராது.எனவே இந்த புரோகிராமினை விண்டோஸ் இயக்கத்தினைப் புதிதாக இயக்குபவர்கள் சற்றுக் கவனத்துடன் கையாள வேண்டும். இதனைப் பெற http://net-studio.org/eng/windows-optimum.html என்ற முகவரியில் உள்ள தளம் செல்லவும்.

3. மீடியா இன்போ (Media Info):
ஒரு ஆடியோ அல்லது வீடியோ பைல்கள் குறித்து, அதன் பைல் ப்ராப்பர்ட்டீஸ் தரும் தகவல்கள் உங்களுக்கு நிறைவைத் தரவில்லையா?ஆடியோ மற்றும் வீடியோ பைல்கள் குறித்து, மிக விரிவான தகவல்களை இது தருகிறது.
இதன் சிறப்பு இது அனைத்து வீடியோ மற்றும் ஆடியோ பைல் பார்மட்டுகளைக் கையாள்வதுதான்.
http://mediainfo.sourceforge.net/en என்ற தளத்தில் இதனைப் பெறலாம்.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"