கணினியின் போல்டர்களை கூகிள் டாக்ஸில் தரவேற்ற உதவும் மென்பொருள்


கூகிள் ஆன்லைனில் கோப்புகளை சேமித்து வைக்கும் வசதியை தந்திருப்பது எல்லோருக்கும் தெரியும்.அதில் எப்பொழுதும் எந்த ஒரு கோப்புகளையும் இந்த இலவச மென்பொருளின் உதவியால் பதிவேற்றலாம்.

இந்த மென்பொருள் மூலம் சுலபமாக கூகிள் கோப்புகள் இணையத்தளத்தில் வலையேற்றலாம்.இந்த மென்பொருளை நிறுவி திறந்து கொண்டு அதில் கூகிள் டாக்ஸ் என்பதனை தேர்வு செய்து உங்கள் பயனர் சொல் மற்றும் கடவுச் சொல்லை கொடுத்தால் உங்கள் கூகிள் கோப்புகள் தெரிய ஆரம்பிக்கும்.


மென்பொருளின் மேலே அப்லோடு என்ற பட்டனை அழுத்தினால் உங்கள் கணினியின் எக்ஸ்பளோரர் தோன்றும்.

அதில் உங்களுக்கு தேவையான போல்டரை தேர்ந்தெடுத்து அப்லோடு செய்தால் போதும் உங்கள் கூகிள் டாக்ஸ் கணக்கினுள் இந்த கோப்புகள் போல்டரோடு சேமித்து விடும்.

இது ஒரு FTP யாகவும் செயல்படும். இந்த மென்பொருள் ஒரு திறந்த நிலை கட்டற்ற மென்பொருள் என்பதும் ஒரு சிறப்பு. இந்த மென்பொருளில் கூகிள் மட்டுமல்ல அமேசான் S3 என்ற வலைத்தளத்திலும் கோப்புகளை பதிவேற்றலாம்.

இலவசமாக மென்பொருளை தரவிறக்க கீழே சொடுக்கவும்



பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"