ஆஸ்திரேலியா சர்ச்களில் சிறுமிகள் பலாத்காரம்!

ஆஸ்திரேலியாவில் சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பாக தேசிய அளவில் விசாரணை நடத்தப்படும் என்று பிரதமர் ஜூலியா கில்லார்ட் அதிரடியாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார். ஆஸ்திரேலியாவில் கத்தோலிக்க சர்ச்களில் சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

நியூ சவுத் வேல்ஸ் பகுதியில் ஹன்டர்வேலி என்ற இடத்தில் உள்ள சர்ச்சில் சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்டது தெரிய வந்தது. இதுகுறித்து புலனாய்வு துறை தலைமை இன்ஸ்பெக்டர் பீட்டர் பாக்ஸ் தீவிர விசாரணை மேற்கொண்டார். அவர் கூறுகையில், சர்ச்களில் சிறுமிகள் பலர் பலாத்காரம் செய்யப்பட்டதற்கான ஆதாரங்களை அழித்துள்ளனர்.

சம்பந்தப்பட்ட பாதிரியார்களை வேறு சர்ச்களுக்கு இடமாற்றம் செய்துள்ளனர். விசாரணையின் போது சர்ச் நிர்வாகிகள் ஒத்துழைப்பு அளிக்கவில்லை. பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டவர்களை காப்பாற்றி உள்ளனர். சர்ச் பெயரை காப்பாற்ற அவர்களை உஷார்படுத்தி உள்ளனர் என்றார்.

இந்நிலையில், ஆஸ்திரேலிய பிரதமர் ஜூலியா கில்லார்ட் கூறுகையில், ‘சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பாக குறிப்பிட்ட எந்த சர்ச் மீதும் குற்றம் சாட்டவில்லை. இதுகுறித்து சர்ச்கள் மட்டுமன்றி தேசிய அளவில் விசாரணை நடத்தப்படும். இதற்கான விசாரணை கமிஷன், அதில் இடம் பெறுபவர்களின் பெயர்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்றார்.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"