19 வருடங்களுக்கு பின் மனைவி ஒரு ஆணென்று கண்டுபிடித்த சம்பவம்


பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த ஒருவர் தன்னுடைய மனைவி ஒரு ஆண் என்பதை 19 வருடங்களுக்குப் பின்னர் கண்டறிந்துள்ளார். இதனால் விவாகரத்து கோரி இப்போது நீதிமன்றத்தை அணுகியுள்ளார்.

ஆணாக பிறந்து பெண்ணாக மாறியவரை நான் திருமணம் செய்து கொண்டது எனக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. உண்மையை மறைத்து என்னை திருமணம் செய்துகொண்டார் மோனிகா, என்று புலம்பி வருகிறார் ஜேன் என்ற 64 வயது நபர். 1993ம் ஆண்டு மோனிகாவை சந்தித்த ஜேன் அவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். முதல் மனைவிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன.

பெல்ஜிய நாட்டை சேர்ந்த ஜேன் இந்தோனேசியாவை சேர்ந்த மோனிகாவை திருமணம் செய்ததால் பெல்ஜிய நாட்டில் குடியேறுவதற்கு குடியுரிமை மோனிகாவிற்கு அதிகாரிகள் தரப்பில் இருந்து ஆட்சேபம் எழுந்தது. அதனையும் தாண்டி இருவரும் மணவாழ்க்கையை தொடர்ந்தனர்.

இந்நிலையில், தனது மனைவி மோனிகா பிறப்பில் ஆணாக பிறந்ததும் பின்னர் பாலின மாற்று சிகிச்சை மேற்கொண்டதும் ஜேனுக்கு தெரிய வந்தது. மோனிகா பார்ப்பதற்கு அழகான பெண்ணைப் போல தோற்றமளித்தாலும் பெண்ணின் குணாதிசயங்கள் சில காணப்படவில்லை. மாதவிடாய் பிரச்சினைகள் எதுவும் ஏற்படவில்லை. இதனால் ஜேன் சந்தேகம் அடைந்தார்.

மேலும் மோனிகா பணிக்கு சென்றாலும் இரவு நேர பார்ட்டிக்கு சென்று லேட்டாக வருவதும் ஜேன்க்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதன் பின்னர் அவர் நடத்திய விசாரணையில் மோனிகா பிறப்பால் ஒரு ஆண் என்பது உறுதியானது. இதனை தொடர்ந்து அவர் தனது திருமணம் செல்லாதது என அறிவிக்க சட்ட ரீதியாக முயன்று வருகிறார் ஜேன்.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"