எய்ட்சை தடுக்கும் பெண்களுக்கான கருத்தடை மருந்து


காண்டம் அணிவது கருத்தடைக்காக மட்டுமல்ல அது பாலியல் நோய் எதுவும் தாக்காமல் பாதுகாக்கக் கூடியது. தற்போது பெண்களுக்காக கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய வகை காண்டம் ஒன்று நமது உடலுக்குள் நுழையும் எச்ஐவி போன்ற நோய்க் கிருமிகளைத் தடுத்து நிறுத்துமாம் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் பெண்களுக்கான இந்த நவீன கருத்தடை சாதனத்தை உருவாக்கியுள்ளனர்.

இது மாத்திரை போல சாப்பிடுவது அல்ல, மாறாக நமது உடலுக்குள் செலுத்தும்படியானது.
அதாவது நமது உடலுக்குள் செலுத்தி அது நமது ரத்தத்தோடு கலந்து செயல்படும் வகையில் இதை உருவாக்கியுள்னர். மிகவும் சிறிய நுன்னிழைகளால் ஆன இந்த கருத்தடை சாதனம் உடலுக்குள் செலுத்தப்பட்ட பின்னர் உள்ளே போய் கண்ணுக்குத் தெரியாத வலையமைப்பை உருவாக்கிக் கொள்கிறது.

இந்த வலையமைப்பானது நமது உடலுக்குள் நுழையும் எச்ஐவி போன்ற நோய்க் கிருமிகளைத் தடுத்து நிறுத்துகிறது. அதேபோல விந்தனுவையும் இது தடுத்த நிறுத்தி கர்ப்பம் உருவாவதை தடுக்கிறது. இந்த சாதனத்தை தேவைப்படும் வரை இதை நாம் உடலுக்குள் வைத்திருக்கலாம். தேவையில்லை என்று கருதினால் உடனேஅதற்குரிய மருந்தை செலுத்தி அழித்து விடலாம். இதற்கு சில நிமிடங்களே போதுமானதாம்.

இந்த உடலுக்குள் செலுத்தும் கருத்தடை மருந்தானது, எச்ஐவி எதிர்ப்பு மருந்துகளை தானே உற்ப‌த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதுதான் விஷேசம்.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"