பள்ளி மாணவிக்கு முத்தம் கொடுத்த உடற்பயிற்சி ஆசிரியர்!


சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே பள்ளி மாணவிக்கு முத்தம் கொடுத்த உடற்பயிற்சி ஆசிரியர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.திருப்புவனம் அருகே கீழடி அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு 700க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.

இந்த பள்ளியில் 28 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களில் 21 பேர் பெண் ஆசிரியர்கள், 7 பேர் ஆண்கள். இந்தப்பள்ளியில் சுரேஷ்குமார் உடற்பயிற்சி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் மைதானத்தில் மாணவிகள் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது ஒரு மாணவியை மட்டும் ஆசிரியர் தனியாக அழைத்துள்ளார்.

அருகில் இருந்த கழிவறைக்குள் மாணவியை அழைத்துக்கொண்டு போய் முத்தமிட்டதாக கூறப்படுகிறது. இதனை மற்ற மாணவிகள் பார்த்துவிட்டு சம்பந்தப்பட்ட மாணவியின் பெற்றோரிடம் கூறவே அவர்கள் பள்ளிக்கு வந்து தகராறு செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து மாவட்ட கல்வி அதிகாரி கலாவதி தலைமையில் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது சுரேஷ்குமாரை வீட்டிற்கு அனுப்பிவைத்து விட்டனர்.

உடற்பயிற்சி ஆசிரியர் முத்தம் கொடுத்தது உண்மைதான் என்று பள்ளி மாணவிகள் அனைவரும் கூறிவருகின்றனர். ஆனால் இந்த சம்பவம் பற்றி தலைமையாசிரியர் தங்கவேல் எந்த தகவலையும் கூற மறுத்துவிட்டார். ஒரு சில ஆசிரியர்களின் செயல்களினால் மாணவிகளின் கல்வி பாதியிலேயே நிறுத்தப்படும் நிலைக்கு ஆளாகிறது.

இது தொடர்பாக மாணவியின் பெற்றோர்கள் திருப்புவனம் போலீசில் புகார் அளிக்கத்துள்ளனர். முறைகேடாக நடந்துகொண்ட ஆசிரியர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"