நிர்வாணப் பெண்ணின் உடலில் உணவு பரிமாறும் ஹோட்டல்! (படங்கள் இணைப்பு)

மியாமியில் உள்ள ஒரு ஹோட்டலில் ஜப்பானிய வகை உணவுகளை வித்தியாசமான முறையில் கொடுக்கிறார்கள். அதாவது நிர்வாணமாக படுத்திருக்கும் ஒரு பெண்ணின் உடலில் உணவுகளை வைத்து அதை வாடிக்கையாளர்களுக்குத் தருகிறார்கள்.

அதாவது தட்டுக்குப் பதில் ஒரு பெண் நிர்வாணமாக படுத்திருப்பார். அவர் மீது உணவுகள் வைக்கப்பட்டிருக்கும். அந்த உணவை நமக்குத் தருவார்கள். நாம் பெண்ணின் உடலிலிருந்து உணவை எடுத்துச் சாப்பிட வேண்டும்.

குங்பூ கிச்சன் மற்றும் சுஷி ஆகிய இரு ஹோட்டல்களும் மியாமி கடற்கரைப் பகுதியில் உள்ளன. இங்குதான் இந்த வித்தியாசமான உணவுப் பரிமாறல் நடக்கிறது. கடந்த மாதம் முதல் நிர்வாணப் பெண்களின் உடல் மீது உணவுகளை வைத்து வழங்குவதை இவர்கள் அறிமுகப்படுத்தியுள்ளனர்.

இதுகுறித்து அந்த உணவகத்தின் தலைமைச் சமையலர் கூறுகையில், ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக நிர்வாணப் பெண்ணின் உடலில் உணவுகளை வைத்துப் பரிமாறுவதை, சாப்பிடுவதை ஜப்பானியர்கள் கடைப்பிடித்து வருகிறார்கள். இது ஜப்பானியர்களின் பாரம்பரியம் என்று கூறினார்.

ஒரு பெண்ணின் உடலில் வைக்கப்படும் உணவை 15 பேர் வரை சாப்பிடலாம். இந்த உணவுக்கான கட்டணம் 500 டாலர்களாகும்.பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"