பெண்களுக்கு புதுமையான ஐஸ் பிரா!!


புதுமையான கண்டுபிடிப்புக்களை மேற்கொள்கின்றமைக்கு பெயர் போனவர்கள் ஜப்பானியர்கள். அந்த வகையில் இப்போது மிகவும் புதுமையான ஒரு கண்டுபிடிப்பை மேற்கொண்டு இருக்கின்றார்கள்.

கோடை காலங்களில் பெண்கள் சூடு தாங்காமல் பெரிதும் அவஸ்தைப்படுகின்றமை வழக்கம். இந்த அவஸ்தைக்கு தீர்வை கொடுக்க ஒரு வகை மார்புக் கச்சையை கண்டு பிடித்து உள்ளனர். உள்ளே ஐஸ் போடப்பட்டு இம்மார்புக் கச்சை செய்யப்பட்டு உள்ளது.

இதனால் இதை ஐஸ் மார்புக் கச்சை அல்லது சூப்பர் கூல் மார்புக் கச்சை என்று அழைக்க முடியும். கோடை காலங்களில் பெண்கள் உடலை ஜில் என்று வைத்திருக்க இது உதவும் என்றும் எயர் கண்டிஷனின் சேவையை பெற முடியாதபோது பேருதவியாகவும், ஆறுதலாகவும் அமையும் என்றும் சொல்லப்படுகின்றது.

குளிரூட்டல் செயல் முறையை மேற்கொள்வதற்காக மிக சிறிய காற்றாடி ஒன்றையும் இம்மார்புக் கச்சை கொண்டு உள்ளது. இதற்கு வசதியாகவும், வேறு இன்னோரன்ன காரணங்களுக்காகவும் இம்மார்புக் கச்சை மீன் தொட்டியின் உருவத்தில் வடிவமைக்கப்பட்டு உள்ளது.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"