மனைவியை ஏமாற்றும் கணவனை கண்டுபிடிப்பது எப்படி?


ஏமாற்றம் நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விஷயம். அதுவும் கணவன் அல்லது மனைவி இருவருள் ஒருவர் நன்கு சந்தோஷமாக வாழும் போது, ஒருவர் மட்டும் ஏமாற்றுகிறார்கள் என்றால் அதை ஏற்றுக்கொள்வது என்பது சாதரணமான விஷயம் இல்லை. அப்போது மனதில் ஏற்படும் வலிக்கு அளவே இருக்காது.

மேலும் அந்த நேரம் அவர்களின் நடவடிக்கைகள் வித்தியாசமாக இருக்கும். முதலில் வாழ்க்கைத்துணை உண்மையில் ஏமாற்றுகின்றனரா, இல்லை நமக்கு சித்தப்பிரம்மை பிடித்துள்ளதா என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். உங்கள் கணவர் எப்போதும் வீட்டிற்கு தாமதமாக வந்தாலோ அல்லது வெளியே செல்லும் போது சீக்கிரம் செல்வது தொடர்ந்தாலோ, அதை கவனிக்க வேண்டும்.

இந்த நிலையில் சந்தேகத்திற்கிடமான அதிகமான நடத்தைகளும் பார்க்கலாம். அதிலும் ஏமாற்றுபவர்கள் மொபைல் போனை மறைத்து வைக்க முயல்வர். அந்த நேரம் ஏதாவது நீங்கள் கேட்டால், அதனை மறைப்பதற்கு வேடிக்கையான விஷயங்களையும் அல்லது முக்கியமானவற்றையும் கலந்து பேசாமல் தவிர்க்க நினைப்பர்.

அதுவும் உங்களுக்கு அதிகம் பிடித்த விஷயங்களை செய்து, அவர்களுடைய தவறிலிருந்து தப்பிக்க முயல்வர். சிலர் அதிகம் கண்டு கொள்ளவே மாட்டார்கள். சொல்லப்போனால், அவர்கள் மனதில் நீங்கள் முன்பு இருந்த நிலைக்கும், இப்பொழுது உள்ள நிலைக்கும் உள்ள வித்தியாசத்தை கண்டுபிடிக்க முடியும்.

போட்டு வாங்குவதன் மூலமும் அவர்கள் தவறு செய்கிரார்கள் என்று அறியலாம். அதற்கு அவர்களிடம் ஈ-மெயில், ஃபேஸ் புக் போன்றவற்றின் பாஸ்வேர்டு போன்றவற்றை அவர்களுக்கு தெரியாமல் பார்ப்பதன் மூலம் கண்டறியலாம். முக்கியமாக தப்பு செய்பவர்களை எளிதில் கண்டறியலாம். அவர்களின் அன்றாட நடவடிக்கைகள் ஒன்றிலிருந்து ஒன்று வித்தியாசப்படும்.

பொய் மேல் பொய் சொல்வர். ஏதாவது சில பொருள்களை கண்முன் படாமல் மறைத்து வைப்பர். நம்மை பிடிக்காத காரணத்தினால் நம்மிடம் அனைத்திற்கும் கோபமாக நடந்து கொள்வர். இத்தகைய செயல்களால் அவர்கள் ஏமாற்றுகின்றனர் என்று அறியலாம். கணவரிடம் வித்தியாசம் தெரிந்தால் உங்கள் கணவரிடம் முதலில் போனில் தொடர்ந்து பேசிய நம்பரை கண்டுபிடிக்கவும்.

பெரும்பாலும் அதற்கு அவர் சரியான பெயரைக் குறிப்பிட்டிருக்க மாட்டார். ஆணாக இருந்தால் பெண்ணின் பெயரும், பெண்ணாக இருந்தால் ஆணின் பெயரும் இருக்கும். அதனை சரியாக கையாண்டு துணைவருக்கு தெரியாத வகையில் தொடர்பு கொண்டு, அதனை நிரூபித்துக்கொள்வது முக்கியம்.

எந்த காரணத்தைக் கொண்டும் உங்கள் கணவருக்கு தெரியாமல் பார்த்துக் கொள்வது நல்லது. இத்தகைய பிரச்சனைகள் உங்கள் கணவரிடம் இருந்தால் இதனை மிகவும் பக்குவமாக கையாள வேண்டும். இல்லையெனில் குடும்ப உறவுகள் சிதைய கூடும்.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"