டிவி மற்றும் ஆடியோ கேசட்டின் பாடல்களை கணினியில் சேமிக்க இலவச மென்பொருள்


Cassette Tapes பயன்கள் தற்போது இல்லை என்றாலும் இன்னும் பொக்கிசமாக ஒருசில ஆடியோ கேசெட்களை நாம் வைத்திருக்கத்தான் செய்கின்றோம். ஆடியோ கேசட்டில் இருக்கும் நமக்கு பிடித்த பாடல்களோ அல்லது நமக்கு பிடித்தமானவர்களின் பேச்சுக்களை பதிவுசெய்து வைத்து இருந்தாலோ அதை கணினியில் சேமித்து வைக்கலாம் CD அல்லது மெமரி கார்டில் மாற்றி கேட்டு மகிழலாம், அதுவும் மிக சுலபமாக!

பொதுவாக அதற்கென்று விசேஷ RCA output jacks இணைப்புடன் "டெக்" (Deck) மூலமே இப்படி மாற்றமுடியும். ஆனால் இதன் மூலம் மிக சுலபமாக மாற்றி விடலாம்.

Cassette Tape Deck இல்லாமலேயே ஏதேனும் ஒரு ஹைதர் காலத்து ஆடியோ பிளேயர் இருந்தாலே போதும் cassette இருபவைகளை மிக சுலபமாக கணினியில் சேமித்துவிடலாம். ஆனால் ஒன்று அந்த ப்ளேயரில் earphone மாட்டகூடிய jack இருக்கவேண்டும். மேலும் கணிணியில் கீழே தரப்பட்ட மென்பொருளையும் நிறுவிக்கொள்ள வேண்டும்.

கணினியையும் ஆடியோ பிளேயரையும் இணைப்பதற்கு தேவையான கேபிளை கீழே பார்க்கவும்.

இப்போது ஆடியோ பிளேயரையும் கணினியையும் இரண்டிலும் இருக்கும் earphone jackகில் இணைத்தபின் இந்த மென்பொருளை திறக்கவும் கீழே இருப்பதைபோல் இதன் விண்டோ திறக்கும்.

இப்போது எந்த கேசட்டில் உள்ள பாடல்களை கணினியில் சேமிக்க வேண்டுமோ அந்த கேசட்டை ஆடியோ பிளேயரில் பொருத்தி play செய்தால் அந்த பாடல் கணினியில் பாடுவதை கேட்க முடியும் இப்போது Audacity மென்பொருளில் இருக்கும் record என்பதினை சொடுக்கினால் பதிவு தொடங்கிவிடும்.

பதிவுகள் முடிந்தபின் Audacity விண்டோவில் மேலே இடது பக்கம் இருக்கும் file என்பதினை சொடுக்கி அதில் இருக்கும் Export As mp3 ... சொடுக்கினால் நொடியில் நீங்கள் பதிவு செய்தவைகளை கணினியில் mp3 யாக சேமித்துவிடும்.

இதேபோல் மொபைலில் இருந்தோ அல்லது ஆடியோ பிளேரில் இருந்தோ இன்னும் எதில் எல்லாம் earphone jack இருக்கின்றதோ அதில் இருந்தெல்லாம் FM ரேடியோ பாடல்களையோ மற்ற நிகழ்ச்சிகளையோ மேற்கூறிய முறையில் இந்த மென்பொருள் மூலம் கணினியில் சேமிக்கலாம்.

தொலைகாட்சியில் நமக்கு பிடித்த பாடல்களையோ அல்லது நிகழ்ச்சிகளையோ இதேமுறையை பின்பற்றி கணினியில் பதிவு செய்யலாம்.

Audacity என்று சொல்லகூடிய இந்த இலவச மென்பொருளை(2.12 MB) இலவசமாக தரவிறக்க கீழே சொடுக்கவும்.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"