பாலியல் தள பார்வையாளர்களில் 43% சிறுவர்கள்: அதிர்ச்சி ரிப்போர்ட்!

உலகில் உள்ள இணையம் மூலமான பாலியல் தளங்களை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களில் 43 விழுக்காட்டினர் 11 – 13 வயதுக்கு இடைப்பட்ட சிறுவர்கள் எனும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த சிறுவர்கள் ஒருநாளில் 10 மணித்தியாலங்களுக்கு அதிகமாக பாலியல் தளங்களில் செலவிடுவதாக நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள். ஆஸ்திரேலியாவை சேர்ந்த நிபுணரான Robert Mittiga இன் தகவலின் படி, குறித்த வீதமான சிறுவர்கள் மடிக்கணினி, ஸ்மார்ட் கைதொலைபேசி மூலமே பாலியல் தளங்களை அணுகுவதாக தெரிவித்துள்ளார்.

சில இணையதளங்கள், சிறுவர்களை கவர்ந்து தமது இணையத்துக்கு அடிமையாக்கும் பொருட்டு கார்ட்டூன் வகை பாலியல் வீடியோக்களை தரவேற்றம் செய்வதாகவும் Robert Mittiga குற்றம்சாட்டினார்.

மேலும் தெரிவிக்கையில், குழந்தைகளுக்கு ஸ்மார்ட் போன்களை தாராளமாக பயன்படுத்த பெற்றோர்களால் சுதந்திரம் தரப்படுகிறது. இதனை சாதகமாக பயன்படுத்தும் குழந்தைகள், ஸ்மார்ட் போனில் வீடியோக்களை பதிவிறக்கி, பாடசாலையில் தமது நண்பர்களோடு பகிர்ந்துகொள்ளும் சம்பவங்களும் அமெரிக்காவில் நடந்தேறியுள்ளன.

சில சிறுவர்கள், தமது பெற்றோர்களின் கடன் அட்டைகளை திருடி, அதன் மூலம் கட்டணம் செலுத்தி பார்க்கவேண்டிய இணையதளங்களை பயன்படுத்துகிறர்கள் என மேலும் தெரிவித்தார்.

பிரிட்டன், ஆஸ்திரேலியா போன்ற நாடுகள், இலத்திரனியல் தயாரிப்பு நிறுவனங்களிடம், அவர்கள் தயாரிக்கும் மடிக்கணினிகள், ஸ்மார்ட் போன்கள் என்பவற்றில் பாலியல் தளங்களை default ஆக தடை செய்து, தேவைப்படும் சமயத்தில் மாத்திரம் பாவனையாளர்களால் அவ் default mode ஐ நிறுத்தி பயன்படுத்தும் முறையை ஏற்படுத்துமாறு கோரிக்கை வைத்து வருகின்றன.

இதன் மூலம் சிறுவர்கள் பாலியல் தளங்களுக்கு அடிமையாவதை குறைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"