தொடையை வாடகைக்கு விடும் பெண்கள்

ஒரு கம்பனி தனது உற்பத்திகளை மக்கள் மத்தியில் கொண்டு சேர்ப்பதற்கு எவ்வளவுதான யுத்திகளை மேற்கொண்டாலும் விளம்பரம் இல்லாமல் ஒரு நிறுவனமும் முன்னேறி விட முடியாது. அதுவும் இந்நவீன காலத்தில் குண்டுசி முதல் கொண்டு காணும் அனைத்தும் விளம்பரப்படுத்தல் மூலமே சந்தைப்படுத்தப்படுகிறது.

இதை நன்றாக உணர்ந்து கொண்ட ஜப்பான் நிறுவனம் ஒன்று அண்மையில் வித்தியாசமான முறையில் தனது விளம்பர யுக்தியை கையாண்டுள்ளது. அதாவது மக்களை அதிகம் கவர்ந்த மக்கள் விரும்பி பார்க்க கூடிய ஒன்றில் தனது விளம்பரத்தை மேற்கொண்டுள்ளது. நீங்கள் தொலைக்காட்சி- பத்திரிகை என்றெல்லாம் கனவு கண்டுவிடாதீர்கள் மாறாக இக்கம்பனி தனது விளம்பரத்தை மேற்கொண்டது அழகிய இளம் பெண்ணின் தொடையில்.

இதற்காக பெண்களுக்கு பகிரங்க அழைப்பு விடுத்துள்ளது இக்கம்பனி. தெரிவு செய்யப்படும் பெண்களின் தொடையில் தனது நிறுவனத்தின் விளம்பர ஸ்டிக்கர்கள் ஒட்டப்படுகிறது. பெண்களும் தொடை தெரிய சனநெரிசல் கூடிய இடங்களுக்கு அப்படியே செல்லவேண்டும். பிறகு என்ன கேட்கவா வேண்டும் சும்மா தொடை தெரிந்தாலே உற்றுப்பார்க்கும் ஆண்கள் அதில் ஏதோ ஒட்டியிருக்கிதென்றால் கண்ணை கழட்டியே பார்த்துவிடுவார்கள்.

இவ்வினோதமான விளம்பர யுக்தியை கையாண்ட குறித்த நிறுவனம் இதற்காக முகப்புத்தகத்திலும் பக்கம் ஆரம்பித்து ஆட்சேர்ப்பு பணியில் இறங்கியுள்ளதாம். இதுவரையில் 1500 மேற்பட்ட தொடை அழகிகள் இதற்கு விண்ணப்பித்துள்ளனராம்...

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"