தாலி வாங்கும்போது கவனிக்க வேண்டியவை


ஹிந்து மற்றும் சில கிருத்துவர்களுக்கும் முக்கியமான ஒரு விஷயம் தாலி என்ற ஒரு விஷயம். ஆம் ஏழை பணக்காரன் வித்தியாசம் இல்லாமல் வரும் ஒரு விஷயம் தான் கல்யானம். அந்த கல்யானத்திற்க்கு தேவை முக்கியமாக "தாலி" எனப்படும் மங்கள்சூத்ரா.

சிலர் தாலியை தன் கணவன் இறந்து போனால் தான் கழட்டுவார்கள் அல்லது அவளின் உயிர் பிரிந்த பிறகு தான் அது அவள் கழுத்தில் இருந்து இறங்கும். இதை குறிவைத்து தான் நிறைய நகைக்கடைகளில் இப்போது ஒரு மோசடியை துவங்கியிருக்கின்றனர். ஆம் கலப்பட தங்கத்தில் தாலி. பில் வேண்டாம் குறைச்சு போட்டு கொடுங்கன்னு கேட்கிறதுனாலே இது நடக்குது.

மக்களே உண்மை என்னவென்றால் 8 கிராம் வரைக்கும் வாங்கப்படும் தாலி, தாலி குண்டு, தாலி காசு, எல்லாவற்றிக்கும் வரி தமிழகத்தில் கிடையாது. அதனால் தாலி வாங்கமட்டும் நகை பில் மறக்காமல் கேட்டு வாங்குங்கள். இந்த பொம்பளைங்க கழட்டவே மாட்டாங்களே இதுல இந்த பில் என்ன மாற்றத்தை உண்டு பண்னும்னு கேட்டா நீங்கள் நகை பில் இல்லாமல் வாங்கினால் உங்களுக்கு பல் இளிப்பு கொஞ்சம் நிறைய இருக்கும் அது கூட அன்பளிப்பு ( எக்ஸ்ட்ரா ரெண்டு ரெக்சீன் பேக் ).

ஆனால் நகையை பில்லோடு வாங்க நீங்கள் முடிவு எடுத்தால் அதை அவர்கள் ஏதோ நகையை இலவசமாக கொடுக்கிற மாதிரி கடு கடுன்னு தான் பில் போடுவார்கள். ஆம் இவர்கள் ஒரு ரூபாய் கூட குறைக்கவும் மாட்டார்கள் காரணம் பில்லோடு கொடுக்கும் நகை கண்டிப்பாக 90% சதவிகிதம் சுத்தமாக இருக்க அதிக வாய்ப்பு உண்டு. அது போக நீங்கள் பார்த்து எடை போட்டபின் அது கேஷியர் இடத்திற்க்கு செல்லும் பின்பு கேஷ் என்றால் அதே 40 - 60% சுத்த தங்க தாலி, பில் என்றால் 90% சுத்தமான தங்க நகை கிடைக்கும். இவர்களுக்கு தெரியும் நல்ல குடும்பத்தார் எத்தகைய சூழ் நிலையிலும் இதை கழட்டுவது இல்லை ஆனால் சில பேர் சாந்தி மற்றும் ரம்மிக்காக அடகு வைக்கும் போது மார்வாடிகள் கொடுக்கும் சில நூறு ரூவாய் தாளுக்கு இவர்கள் ஒன்று கூறுவது இல்லை ஏன் என்றால் இதை வைத்து பணம் கேட்கிறோமே என்ற கூச்சம்.

மறக்காமல் பில் போட்டு வாங்கியவுடன் நல்ல தங்க ஆசாரியிடம் இதன் தரத்தை டபுள் செக் பண்ணிகொள்ளுங்கள் உள்ளே எவ்வளவு மெழுகு அடைத்து வைத்திருக்கின்றனர் என்று பார்க்க சொல்லுங்கள். அதை விட்டு கடையில் கேரட் மீட்டரே நல்ல தங்கம்னு காட்டிடுச்சு பீட் ரூட் மீட்டர் பர்ஃபெக்ட்னு சொல்லிடுச்சுனு பினாத்துனா பொண்டாட்டி தெய்வத்துக்கு கள்ள தங்க தாலி வாங்க நீங்க தான் காரணம்னு வாழ்க்கை முழுவதும் குமட்ல குத்துவாங்க பாருங்க..........பில் கொடுக்காத கடைகளை தவிருங்கள் அதே சமயம் கன்ஸ்யூமர் ஃபாரமுக்கு கம்ப்ளெய்ன்ட் கொடுத்தால் அபராதமும் சிறை தண்டனையும் உண்டு

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"