ஆசிரியை குளிப்பதை செல்போனில் படமெடுத்த இளைஞனுக்கு தர்மஅடி!


தமிழகத்தின், திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள ஆயக்குடி ஆதிதிராவிடர் காலனியை சேர்ந்த, 21 வயதான, ஆசிரியர் பயிற்சி முடித்துள்ள பெண்ணொருவர், நேற்று மாலை வீட்டின் முன்புறம் உள்ள குளியல் அறையில் குளித்துகொண்டிருந்தார்.

அந்த அறை கிடுகால் வேயப்பட்டிருந்தது. மேற்கூரை இல்லை. இதனை நோட்டமிட்ட அதே பகுதியை சேர்ந்த இளைஞர் (23) ஒருவர் அங்கு சென்றார்.

அவர் கிடுகில் உள்ள ஓட்டை வழியாக செல்போன் மூலம் குறித்த பெண் குளித்து கொண்டிருப்பதை படம் எடுத்தார்.

அப்போது கிடுகு அசைவது கண்டு அதிர்ச்சி அப்பெண், தன்னை ஒருவர் படம் எடுப்பதை பார்த்து திடுக்கிட்டு கூச்சல் போட்டார். சத்தம் கேட்டு அக்கம் பக்கம் உள்ளவர்கள் ஓடிவந்தனர்.

அந்த இளைஞனை மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்து ஆயக்குடி பொலிசில் ஒப்படைத்தனர். பொலிசார் அவரை கைது செய்தனர். செல்போனும் பறிமுதல் செய்யப்பட்டது.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"