4 வகையான திருநங்கையினர்

1 ட்ரான்வெஸ்ட்
இவங்க எந்த டைப் என்றால் எதிர்பாலாரின் உடைகள் மற்றும் பொருட்களில் அதிக ஈடுபாடுகள் கொண்ட நடத்தை கொண்டவர்கள் ஆனால் இவை தவிர தான் "இயல்பான ஆண் என்பதை போன்றவர்கள்". உதாரணமாக சொல்ல போனால் பெண்களின் புடவைகள், சாரி, உள்ளாடைகள் என அணிய அதில் தீவிர நாட்டம் கொண்டவர்களாய் இருப்பார்கள். ஆனால் தன்னுடைய இயல்பு மனதில் எந்த வித மாற்றமும் இருக்காது.

2 ட்ரான்ஸ் செக்ஸூவல்ஸ்
இவர்கள் உடலும் உணர்வும் வேறுபட்டவர்கள். உடல் ரீதியாக ஆணாக இருப்பார்கள் அதாவது உறுப்புக்கள் மீசை தாடி எல்லாமே.

ஆனால் மனோ ரீதியாக தன்னை பெண்ணாக உணர்ந்து கொள்வார்கள். (அப்படியே உல்டாவாக உடல் ரீதி பெண்களுக்கு இருக்கும்)

இதைக்குறித்து ஆராய்ச்சியாளர்கள் சொல்லுகையில் இப்படி பட்டவர்கள் தங்களை ஒரு சிறையில் அடைபட்ட உணர்வோடே வாழ்வார்களாம். தங்களது உடலில் உள்ள உறுப்புகளில் வெறுப்பு வருவதோடு தனது உருவ அமைப்பு (ஆண் - ஆண் ) உள்ளவர்களோடு ஈர்ப்பு கொண்டவர்களாக இருப்பார்களாம்.

இதில் ஆணாக பிறந்து பெண்ணாக மாற நினைத்தவர்களே அதிகம் என கூறபடுகிறது.

3 இன்டெர் செக்ஸ்
அதாவது பிறப்பு ரீதியில் ஆண் அல்லது பெண் ஜனன உறுப்புக்கள் பரிபூரணமாக வளர்ச்சி அடையாத நிலை கொண்டவர்கள். (இந்தியாவில் இருக்கும் திருநங்கைகள் அநேகர் இந்த ரகம் என்றே கணிக்கபட்டுள்ளது).

4 யூனக்
அதாவது இந்த பிரிவில் ஆண்கள் மட்டுமே இருப்பார்கள். இவர்கள் விதை, மற்றும் ஆண்குறியை நீக்கிய நிலையில் இருப்பவர்கள்.. சூழ்நிலை காரணமாக இவை நிகழும் என்று கூறபடுகிறது.
  • அக்காலத்தில் அந்த புறம் போன்ற பகுதிகளில் வேலைக்கு அமர்த்தப்பட்ட ஆண்கள் விதை மற்றும் ஆண்குறி அகற்ற பட்டார்கள்.
  • ஹோமோசெக்ஸ்
  • குரல்வளம். மென்மையான குரல் கொண்டவர்கள் அதில் உள்ள பிரியத்தில் அதை மாற்ற நினைப்பதில்லை..

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"