காமத்தை தூண்டும் மன்மதனின் 5 வகை மலர் அம்புகள்


காமசூத்திரத்தில் சொல்லப்பட்டுள்ள வசியச்சக்கரம், ஏ, ஐ, அ, இ, உ- என்ற 5 எழுத்துக்களைக்கொண்டது. மேற்படி எழுத்துக்கள் அடங்கிய சக்க ரத்தை ஒருவர் தன் கண்களால் கரும்பு வில் லாக பாவனை செய்ய வேண்டும். பாவனை செய்து நாயகியின் மார்பு, முலை, கண், உச்சி, நிதம்பம் போன்ற இடங்களில் முறையே ஒவ் வொரு எழுத்தாக எழுதி மனதாலே சாஸ்திரம் செய்து அம்பு எய்துவது போல எண்ணினால், நாயகி மனம் மகிழ்வாள்.

மன்மதனுக்கு 5 மலர் அம்புகள் உண்டு. அவை, தாமரை, மாம்பூ, அசோகம், முல்லை, நீலோற் பலம். இதையே ஒரு பெண்ணின் நெஞ்சில் தாமரை இருப்பது போன்றும், விழிகளில் அசோக மலர் இருப்பது போன்றும், தலையில் முல்லைப் பூ இருப்பது போன்றும் பாவனை செய்து, தனது கண்களாகிய அம்பால் எய்துவார் என, மதனநுல் ஆய்ந்தோர் கூறுவார்கள். இதனால் இந்த 5 மலர்களும் மக்களை வருத்தும் என்பார்கள்.

மதனநூல் கற்றோர், தாமரைப் பூவால், பெண்களுக்கு இன்பம் ஏற்படும், மாம்பூவால் கண்களுக்கு துன்பம் ஏற்படும், முல்லைப்பூ மயக்கத்தை அளிக்கும் என்று கூறுவார்கள். நீலோற் பல மலர், உயிர் போவது போல தன் நிலையைக் கெடுத்து மயக்கம் தரும். அந்த 5 வகை அம்புகள் ஒன்றையொன்று மிஞ்சி மன்மத விகாரத்தை, ஆண், பெண்ணின் மனத்தில் எழுப்புத் தன்மை கொண்டதாகும் எனவும் கூறப்படுகிறது.

இப்படியே காமன் தனக்குள் மலர் அம்புகள் எய்து கொண்டிருப்பதாக எண்ணிக்கொண்டிருந்தால், கணவன், மனைவிக்கு இன்பம் பெருகும் எனவும் காமசாஸ்திரம் கூறுகிறது. இதனால் சிறந்த மகப்பேறும் கிடைக்கும் எனவும் அது சொல்கிறது.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"