ஆணுறுப்பை அறுத்து கோழிக்கு போட்ட அதிசய மனிதன்

உடல்நலம் பாதிக்கப்பட்டதால் விரக்தியடைந்த முதியவர் தன் மர்மஉறுப்பை கத்தியால் அறுத்து கோழியிடம் வீசினார். வலி தாங்க முடியாமல் கதறி அழுத அவரை அக்கம்பக்கத்தினர் ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளனர். இச்சம்பவம் சித்தூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் மதனப்பள்ளி அம்மசெருவு மிட்டா பகுதியை சேர்ந்தவர் எர்ரப்பா (60).தேங்காய் வியாபாரி. இவருக்கு 4 மகன்கள் உள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு எர்ரப்பாவின் உடல்நலம் பாதிக்கப்பட்டது.

இதனால் அவரது ஒரு கால் செயலிழந்தது. பெங்களூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் பரிசோதனை செய்தபோது எர்ரப்பாவின் காலை எடுக்க வேண்டும் என டாக்டர்கள் கூறினர். மனமுடைந்த எர்ரப்பா யாரிடமும் பேசாமல் இருந்துள்ளார்.
நேற்று மாலை குடும் பத்தினர் அனைவரும் வெளியே சென்றிருந்தனர். வீட்டில் எர்ரப்பா மட்டும் இருந்தார்.

தன் உடல்நிலை இப்படி ஆகிவிட்டதே என்று விரக்தியும் வேதனையும் அடைந்த அவர் காய்கறி நறுக்கும் கத்தியை எடுத்தார். திடீரென தன் ஆணுறுப்பை அறுத்து, வீட்டில் வளர்த்து வரும் கோழிகளிடம் வீசினார். நேரம் ஆகஆக ரத்தப் போக்கும் அதிகமானது.
வலி தாங்க முடியாமல் கதறி துடித்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர்.

ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை உடனடியாக மதனப்பள்ளி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து மதனப்பள்ளி தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"