குழந்தைகளுக்கு பயன்தரும் மிருகங்களின் ஒலி நூலகம்


நம் குழந்தைகளுக்கு நாம் மிருகங்களை படம், வீடியோ மூலம் அறிமுகப்படுத்தலாம். சில வேளைகளில் சில மிருகங்களை அவை வாழும் இடத்தில் அல்லது உயிரியல் பூங்காக்களில் காட்டலாம். அவற்றைப் பார்த்த பின்னர், நம் குழந்தை குறிப்பிட்ட மிருகத்தின் குரல் எப்படி இருக்கும்? எனக் கேட்டால் என்ன பதிலைத் தருவது.

இந்தப் பிரச்னையை ஓர் இணைய தளம் தீர்த்து வைக்கிறது. மிருகங்களின் ஒலி நூலகம் (Animal Sounds Library) என இதற்கு பெயர் வைத்திருக்கிறார்கள்.

இந்த தளத்திற்குச் சென்று, நீங்கள் கேட்க விரும்பும் மிருகத்தின் படத்தின் அருகே உள்ள listen பட்டனை அழுத்தவும். அதற்கான பைல் லோட் ஆகி, உடனே தானாக இயங்கி, மிருகத்தின் ஒலியைக் கொடுக்கும். மீண்டும் மிருகங்களின் பட்டியலைப் பெற, பேக் பட்டனை அழுத்தவும். சிங்கக் குட்டி, கொரில்லா குரங்கு, ஒட்டகம், நீர் வாழ் விலங்குகள் என எல்லாமே இங்கு கிடைக்கின்றன. உங்கள் குழந்தைகளுக்குக் காட்டி, குதூகலம் அடைந்து, நீங்களும் மகிழ்ச்சியாக அவர்களுடன் விளையாடலாம்.

ஆசிரியர்களுக்கு பயன்படும் பல்வேறு தகவல்களையும் இங்கே தெரிந்து கொள்ளலாம்.

இணையதளம் செல்ல கீழே சொடுக்குங்க..

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"