ஜேம்ஸ் பாண்டு ரக கைகடிகாரம் வைத்து நோயாளிகளின் அந்தரங்கத்தை படம் பிடித்த டாக்டர்!

இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் டாவிண்டெர்ஜித் பெயின்ஸ் (45). இவர் இங்கிலாந்தின் ராயல் வூட்டன் பசெட் என்ற சிறிய நகரத்தில் பொது மருத்துவராகப் பணிபுரிந்து வந்தார். சென்ற ஜூன் மாதம் இவரிடம் சிகிச்கைக்கு 19 வயதுடைய பெண் ஒருவர் வந்தார். டாக்டரின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த அவர், பெயின்ஸ் தன்னிடம் தவறாக நடந்து கெண்டதாகவும், அதனைப்படம் பிடித்தது போல் தனக்குத் தோன்றியதாகவும் கூறி புகார் அளித்தார். புகாரைத் தொடர்ந்து மார்க் கரீட் என்ற துப்பறியும் நிபுணர் இதனை ஆராய்ந்ததில், பெயின்ஸ் நடத்திய லீலைகள் வெளிச்சத்துக்கு வந்தது.

அப்போது, இவரிடம் வைத்தியம் பார்க்க வரும் 14 வயதிலிருந்து 51 வயதுடைய பெண் நோயாளிகளின் அந்தரங்கங்களை அவரது ஜேம்ஸ் பாண்டு ஸ்டைல் கைகடிகாரத்தில் உள்ள ரகசிய காமிராவின் மூலம் பதிவுபண்ணி வைத்திருந்த 361 வீடியோ கிளிப்புகள் அம்பலமானது. 2010 ஜூலை முதல் 2012 மே வரை டாக்டர் இது போன்று பதிவு செய்து வந்துள்ளார். இவர் மீது இரண்டு முறை சிறுவயதினருடன் தவறான நடத்தையிலும் ஈடுபட்டது, ஒருமுறை மயக்க மருந்து கொடுத்து உடல்உறவு கொள்ள முயன்றது போன்ற குற்றங்கள் உள்ளிட்ட 40 குற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 39 குற்றங்களை பெயின்ஸ் ஒப்புக்கொண்டுள்ளார்.

தன்னுடைய செயல் குறித்து பெயின்ஸ் எந்தவித வருத்தமும் தெரிவிக்கவில்லை. இப்புகாரை விசாரித்த துப்பறியும் நிபுணர் மார்க் கரீட் பேசிய போது, “தன்னுடைய தொழிலின் மீது மக்கள் வைத்திருந்த அபார நம்பிக்கையை தவறாகப் பயன்படுத்திக்கொண்ட இவன், ஒரு காம கொடூரன்” என கூறினார். டாவிண்டெர்ஜித் 1993-ம் ஆண்டு தனது மருத்துவ படிப்பை இந்தியாவின் மங்களூர் மருத்துவ பல்கலைக்கழகத்தில் பெற்றார். கடந்த 2007ம் ஆண்டு முதல் இங்கிலாந்தில் பொது மருத்துவராக பணிபுரிந்து வந்தார் என்பதும் இவர் தற்போது பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தகது.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"