பாலியல் குற்றங்களின் காரணிகள்வகுப்பறைக்குள் மாணவிகளை பலாத்காரம் செய்யும் ஆசிரியர்களைப் பற்றியும், காவல் நிலையத்திலே கணவர் முன்பே பெண்ணை சிதைத்த போலீஸ் மிருகங்களைப் பற்றியும், தெய்வீகம், தியானம் என்ற போர்வையில் காமக்களியாட்டங்களும், கொலைகளும் நடத்திய ஹைடெக் சாமியார்கள் பற்றியும், தேவாலய வளாகத்திலேயே பெண்களை சூறையாடும் பாதிரியார்களைப் பற்றியும், சாலையில் சென்ற இளம் பெண்ணை வம்பு செய்து ஆடையைப் பிடித்து இழுத்து அலைக்கழித்து உயிரையே பறித்த, இளைஞர்களைப் பற்றியும் செய்திகள் வந்து கொண்டே இருக்கின்றன. பாலியல் குற்றங்கள் எல்லா இடங்களிலும் எல்லா மட்டங்களிலும் பரவி வருகின்றன.

மனித உரிமைகளுக்காக, சமூக நியாயங்களுக்காக, மனித மேன்மை-களுக்காக குரல் கொடுக்க வேண்டிய பத்திரிகைகளும், திரைப்படங்களும், தொலைக்காட்சிகளும் பாலியல் வேட்கையை கிளறி விடுகின்றன. வக்கிர உணர்வுகளுக்கான விதைகளைத் தூவுகின்றன. வன்முறை உணர்வைத் தூண்டுகின்றன.

இவைகளால் உந்தித் தள்ளப்படும் குழந்தைகளும், மாணவ, மாணவியரும், இளைஞர்களும் தவறான (பாலியல்) பாதைகளில் பயணம் செய்து வருகின்றனர். ஒரு பக்கம் தகவல் தொடர்புச் சாதனங்கள் பாலியல் தொடர்பான வியங்களை மதவாத கருத்துக்களுக்கு உரமூட்டும் வகையிலும், விஞ்ஞானத்துக்கு புறம்பான வகையிலும் பரப்புகின்றன. மறுபக்கம் மேலைநாட்டு கலாச்சாரமும் தங்குதடையின்றி இறக்குமதி செய்யப்படுகின்றன.

மேலை- நாடுகளில் சாதாரணமானவர்களிலிருந்து ஜனாதிபதி வரை பாலியல் குற்றங்களில் கற்பு பற்றியும் உரக்க கூச்சலிடும் இங்கே மேலைநாட்டு (அ) நாகரீகங்களின் நச்சு நிழல் படிவதால் பாலியல் தவறுகள் பெருக்கெடுக்கின்றன. மனித உறவுகளில் மாசு படிகிறது. சமூக மாண்புகள் அழிகின்றன.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"