"வயதைப் பற்றி அக்கறை இல்லை" ஆடம்பர வாழ்க்கை வாழ மாணவிகள் தயார்


கோடீஸ்வரர்களின் வயதைப் பற்றி அக்கறை இல்லை. இக்கோடீஸ்வர்கள் ஆடம்பர வாழ்க்கையை ஏற்படுத்திக் கொடுக்கக் கூடியவர்களாக இருக்க வேண்டும்.

Jiayuan என்கிற சீன வெப் சைட் டேட்டிங்குக்கு அந்நாட்டில் மிகவும் பிரபலமானது. Gong Xiaoyuan என்கிற 24 வயது மாணவர் ஒருவர் இந்த வெப் சைட்டை நடத்துகின்றார்.

பல மில்லியன் கணக்கான சீன மாணவிகளை இந்த வெப் சைட்டில் சந்திக்க முடியும்.இவர்களில் 25 மில்லியன் வரையானோர் கோடீஸ்வர ஆண்களை தேடி தவம் கிடப்பவர்கள்தான்.

இவர்கள் நான்கு வரங்களை கோருகின்றனர். வியாபாரம் அல்லது தொழில், வீடு, கார், கை நிறைய சம்பளம் என்பன இந்த நான்கும்.

Zhang Yan என்பவர் ஒரு மருத்துவ மாணவி. 200,000 யுவான்களை தர தயாராக உள்ள கோடீஸ்வரை திருமணம் செய்ய ஆயத்தமாக உள்ளார் என்று பகிரங்கமாக இந்த வெப் சைட்டில் அறிவித்து உள்ளார்.

" கோடீஸ்வரர் யார்? என்பது எல்லாம் ஒரு பொருட்டு அல்ல. இப்பணத்தை தந்தால் எந்நேரத்திலும் திருமணம் செய்ய தயாராக உள்ளேன். "

இவ்வாறு வெப் சைட்டில் விளக்கமும் தந்து உள்ளார்.

இவருடைய கோரிக்கையை கோடீஸ்வர வாலிபன் ஒருவர் ஏற்றுக் கொண்டுள்ளார்.இம்மாணவியின் தாய்கூட இவ்வேற்பாட்டுக்கு சம்மதித்து உள்ளார்.

24 வயது மாணவி ஒருவருடன் 54 வயது கோடீஸ்வரர் ஒருவர் உறவை ஏற்படுத்தினார். இக்கோடீஸ்வரரின் பெயர் Wang Began. மாணவி இவரிடம் இருந்து வீடு ஒன்றையும், ஒரு மில்லியன் யுவான் ரொக்கப் பணத்தையும் கோரி இருந்தார்.

இருவரும் வெளியில் ஒன்றாக திரிந்து பல மாதங்கள் உல்லாசமாக இருந்தனர். ஆனால் 60 வயது உடைய சீன-அமெரிக்கர் ஒருவர் இம்மாணவியை அமெரிக்காவுக்கு கூப்பிடுவார் என்று வாக்குறுதி வழங்கி உள்ளார். எனவே இம்மாணவி ஆளை மாற்றிக் கொண்டார்.

ஆனால் Wang வேறு ஒரு மாணவியை பெற்றுக் கொண்டார்.

ஒரு மாணவி 28 வயது உடைய இளைஞன் ஒருவருடன் தொடர்புக்கு சம்மதித்தார். ஆனால் இளைஞன் சிறிய வீடு ஒன்றில் வாடகைக்கு வசிக்கின்றவர் என்று அறிந்தவுடனேயே முதலாவது டேட்டிங்கிலேயே ஆளை கழற்றி விட்டு விட்டார்.

"சொந்த வீடு இல்லாத ஒருவரை என்னால் விரும்ப முடியாது. இளைஞனாகவும், அழகனாகவும் இருந்து பயன் இல்லை. "

இவ்வாறு இம்மாணவி காரணம் கூறுகின்றார்.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"