கால்குலேட்டருக்குத் தேவையான விதவிதமான ஸ்கின்கள்


கம்ப்யூட்டர்களில் பயன்படுத்தும் கால்குலேட்டர்களில் பலவகை உள்ளன. சாதாரண கணக்குகளைப் போடுவதிலிருந்து அறிவியல் கணக்குகளுக்கான தீர்வுகளைப் பெறப் பயன்படுத்தும் கால்குலேட்டர்கள் வரை நிறைய உள்ளன. அண்மையில் நான் இணையத்தில் கால்குலேட்டர் ஒன்றைக் கவனிக்க நேர்ந்தது. இந்த கால்குலேட்டர் சாதாரண கால்குலேட்டர் தான். ஆனால் கண்களுக்கு, குறிப்பாகக் குழந்தைகளுக்கு, விருந்தளிக்கும் வகையில் இவை கால்குலேட்டருக்கான மேல் பூச்சினை (ஸ்கின்) தருகின்றது.

இந்த வகையில் நூறு வகையான ஸ்கின்களைத் தருகிறது. இரண்டு கல்லூரிகளின் படங்கள், மோட்டாரோலா போன் போல, ஹலோ கிட்டி, சாண்டா கிளாஸ் எனப் பலவகை ஸ்கின்கள் உள்ளன.

நீங்கள் விண்டோஸ் 2000 க்குப் பின் வந்த ஆப்பரேட்டிங் சிஸ்டங்களைப் பயன்படுத்துவதாக இருந்தால் Ctrl + Shift + Down Arrow கீகளை அழுத்தினால் கால்குலேட்டர் ட்ரான்ஸ்பரண்டாகத் தெரியும். Ctrl + Shift + UpArrow கீகளை அழுத்தினால் அது முற்றிலும் மாறி பழைய தோற்றத்திற்கு வரும்.

இந்த ஸ்கின் பட்டன்களில் ஒரு பட்டனை அழுத்தினால் இந்த கால்குலேட்டர் விண்டோ எப்போதும் மற்ற விண்டோக்களுக்கு மேலாக இருக்கும். இதன் பெயர் SkinCalc கால்குலேட்டராகும். இதனை கீழே உள்ள தளத்திலிருந்து இலவசமாக டவுண்லோட் செய்து கொள்ளலாம்.

இணையதள முகவரி : http://www.skincalc.com/

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"