மாற்றுப் பாலினர் மீது கவர்ச்சி


கவனம் ஈர்க்கப்படுவது அல்லது கவரப்படுவதுதான் முதலில் நடைபெறுவதாகும். இது பெண் முதல் மாதவிடாய் காண்பதற்கு முன்பும் பையன் ஈரக்கனவு ஏற்படுவதற்கு முன்பும் இடம்பெறும்.

இக்கவர்ச்சி ஒரு பட்சமானது. ஒருவர் கவர்ச்சி ஏற்பட்டு அதிக நேரம் அதே நினைவிலேயே ஊறியிருப்பார். இதனைத் தமக்குள்ளேயே வைத்துக்கொள்வார்கள். அவர்கள் முன்பு வெட்கப்பட்டோ அல்லது வாய்மூடி மௌனிகளாகவோ இருப்பார்கள்.

இந்தக் கவர்ச்சி முறையை ஈர்க்கப்படுதல் என்றும் கூறுவர். ஆனால் ஈர்க்கப்படுவது என்பது அவ்வளவு கடுமையாகக் கொள்ளாத நிலையே. ஆனால் கவரப்படுவது என்பது ஏதோ விதமான சிநேகபூர்வமான நிகழ்ச்சியாகும்.

இந்தியாவில் எதிர்ப்பாலினருடன் நெருங்கிப் பழக வாய்ப்பில்லாது இருக்கும். அப்படிப்பட்டவர்கள் பஸ்களில் அன்றாடம் பயணம் செய்பவர்களில் ஒருத்தியை தன்னுடையவள் என்று கருதிக்கொள்வார்கள். தான் நினைத்து இருப்பதைச் சம்பந்தப்பட்ட பெண்ணுக்குத் தெரிவிக்கவும் முயலுவதில்லை.

ஆனால் வேறோர் ஆடவன் அவளுடன் உரையாடிக் கொண்டு இருப்பதைக் கண்டால் ஆவேசம் கொள்வான். சில வேளைகளில் அவளுக்கு வெகுமதி கொடுக்க முன்வருவான். அவளுக்கு ஏன் தனக்கு அது கொடுக்கப்பட்டதென்றே தெரியாது.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"