காருக்குள்ளே காதல் மனைவியை உறவினர்களுடன் பலாத்காரம் செய்த கொடூரம்!


அரியானாவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரை டெல்லியைச் சேர்ந்த இந்திரஜித் காதலித்து வந்தார். காதலர்கள் இருவரும் பெற்றோர்களுக்குத் தெரியாமல் அரியானாவில் உள்ள கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.

இந்நிலையில் இந்திரஜித் தம் காதல் மனைவியை பதிவுத் திருமணம் செய்து கொள்ளலாம் எனக் கூறி டெல்லிக்கு அழைத்துள்ளார். கணவரை நம்பி டெல்லிக்கு சென்றுள்ள இளம்பெண்ணை காரில் அழைத்துச் சென்றுள்ளார் இந்திரஜித். அந்த காரில் இந்திரஜித்தின் உறவினர்கள் நிதின் மற்றும் விஜேந்தர் ஆகியோரும் பயணம் செய்துள்ளனர்.

காரில் இளம்பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த குளிர் பானத்தைக் கொடுத்து அவர் மயங்கியவுடன் அவரை பாலியல் பலாத்காரம் செய்து ரோட்டில் வீசி விட்டுச் சென்றுள்ளனர். அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அந்த பெண் காவல்துறையில் ஒப்படைக்கப் பட்டார். காவல்துறை வழக்குப் பதிவு செய்து இந்திரஜித்தை கைது செய்துள்ளது.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"