ஈரக்கனவு மூலம் விந்து வெளியேற்றம்


விந்து என்பது உங்கள் விதைகளில் தயாரிக்கப்படும் தடித்த வெள்ளை நிறப்பாய்பொருள். இந்தப் பாய்பொருள் விந்துகளை
பெண்ணின் கருமுட்டைகளோடு மோதப் பாய்ந்தோடுகின்றன. புறஸ்ரேட் சுரப்பிகள் வழியாக வரும்போது கூடுதலான திரவம் ஆண்குறியை அடையுமுன் சேர்கிறது. விந்துகளுக்கு இந்தத் திரவமெல்லாம் எதற்கு? மீன் அசைந்து இடம் பெயர்ந்து திரிய நீர் தேவை. அது போலவே விந்துகளும் திரிய திரவம் தேவைப்படுகிறது.

விந்துத் திரவம் வெறும் திரவம் மட்டுமல்ல. பலவிதமான ஊட்டச் சத்துக்களும் கொண்டிருக்கும். விந்துகளுக்குத் தேவையான ஊட்டச் சத்தை வழங்குகின்றன. ஆண்குழந்தைக்கான விந்து ஒரு நாள் மட்டும் உயிர்வாழும். ஆனால், பெண்குழந்தைக்கான விந்து மூன்று நாட்கள் வரை உயிர் வாழும்.

ஒவ்வொரு விந்து வெளியேற்றத்தின் போதும் சராசரி நானூறு மில்லியன் விந்துகளை வெளியேற்றுகிறது. ஒவ்வொரு முறை விந்து வெளியேற்றத்தின் போதும் வெளியாகும் விந்தின் தொகை இந்தியாவின் சனத்தொகையின் பாதியை உருவாக்கப் போதுமானது. விதைகளில் உருவாகும் விந்துகள் முதிர்ச்சி அடைய ஆறு கிழமைக் காலம் எடுக்கும்.

ஆரோக்கியமான விந்துகளே விந்து வெளியேற்றத்தின் போது வெளிவருகின்றன. நன்கு பழுக்காதவை மரணிக்கின்றன. அவை விந்து வெளியேற்றத்தின் போது வெளிவருவதில்லை. பயனுள்ள விந்துகளை வீணாக்குகிறோம் என்று நாம் கவலைப்படும் போது இயற்கையானது எவ்வளவு விந்துகளை உங்களுக்குத் தந்து உதவுகிறது எனச் சிந்திக்கலாம்.

தாமாகவே தமது விந்தை வெளியேற்ற முயலும் போதும் தமது ஆண்குறியைத் தட்டி எழுப்பும் போதும். உணர்வின் உச்சக் கட்டத்திலுல் விந்து வெளிப்படுகிறது.நித்திரை செய்து கொண்டிருக்கையில் விந்து வெளிப்படுகிறது. இதற்குக் காம வெறியோடு கூடிய கனவு தோன்றும் போது, அக்காம உணர்வில் உச்சக் கட்டம் அடைந்து விந்து வெளிவருகிறது. நித்திரை கலைந்த பின் ஆடையிலோ படுக்கை விரிப்பிலோ விந்து படிந்திருக்கும். இதனை ஈரக்கனவு என்பர்.

முதல் விந்து வெளியேற்றம் பெருமையுடன் கொண்டாடக்கூடிய சம்பவம் என்பதை அறிந்து கொள்ளாத பையன்கள் விரக்தியும் வேதனையும் அடைவார்கள். பாலியல் பற்றிய நல்ல யோசனையை அறியமாட்டார்கள்.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"