விந்தணுவை அழிக்கும் புதிய வகை கருத்தடை முறை


விந்தணுவை அழித்தல் (Sperm Zapping) என்று ஆண்களுக்கான புது வகையான கருத்தடை முறை அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. இது அல்ட்ராசவுண்ட் மூலயமாக ஆண்களின் விந்தணுவை நிறுத்தி பெண்கள் கர்ப்பமாவதை தடுக்கும். விந்தணுவை அழித்தல் என்றால் என்ன? எலிகளை வைத்து நடத்தப்பட்ட ஆய்வின்படி, சிறு அளவிலான அல்ட்ரா ஒலியை எலியின் ஆண்விதை மீது வைத்ததனால், விந்தணு உற்பத்தி நின்று போனது கண்டுப்பிடிக்கப்பட்டது.

எலிகளுக்கு நடந்த ஆய்வை, மனிதனோடு ஒப்பிடுகையில் இதை ஆணுக்கு செயல்படுத்தினால் விந்தணு தயாரிப்பு முற்றிலும் நின்றுவிடுவதற்கு பதிலாக மலட்டுத் தன்மையை ஏற்படுத்திவிடும். இது கிட்டத்தட்ட ஆண்மை நீக்கம் போலத் தான். ஆனால் ஒரு வித்தியாசம் என்னவென்றால் இது தற்காலிகம் தான். மேலும் இவ்வாறு செய்த பின்னர் மலட்டுத்தன்மையை போக்குவதற்கு, அதற்கான ஊசி ஒன்றை போட்டால், அந்த ஊசியில் உள்ள மருந்தானது விந்தணு எண்ணிக்கையை பாதிப்படைய வைத்த ஜெல்லை வெளியேற்றி, சில நாட்களில் மலட்டுத்தன்மை நீங்கிவிடும்.

விந்தணுவை அழித்தல் எப்படி நடக்கிறது? மருத்துவர் ஒரு ஆணின் விந்துக்குழாயின் வழியே ஒரு ஜெல்லை உள்ளேற்றுவார். விந்துக்குழாய் என்பது ஆண் விதையிலிருந்து ஆண் குறிக்கு விந்தணு வரும் ஒரு குழாயாகும். இந்த ஜெல்லை உள்ளேற்றினால், அது விந்தணுவின் ஓட்டத்தை தடுத்து, விந்தணு வெளியேறுவதை தடுக்கும். எனவே இந்த முறையை ஒரு இயற்கை கருத்தடை முறையாக எண்ணி ஆண்கள் இதை பயன்படுத்தலாம். இதுவும் ஆண்மை நீக்கம் போலத் தான். ஆனால் இதில் விந்துக்குழாயை கட்டிப் போடுவதோ அல்லது வெட்டி எரிவதோ நடப்பது கிடையாது. ஒரே ஒரு ஊசி மட்டும் விந்துக்குழாயில் போட்டுக் கொள்ள வேண்டும்.

ஏற்கனவே சொன்னது போல் விந்தணுவை அழித்தல் என்பது ஆண்களுக்கு நிரந்தர கருத்தடை செய்து விடாது. தேவைப்பட்ட நேரத்தில் இந்த முறையைப் பயன்படுத்தலாம். ஆய்வாளர்கள் இன்னும் இந்த முறையை பற்றி ஆராய்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள். இதுநாள் வரை இந்த கருத்தடை முறை ஆண்களுக்கு எந்த ஒரு பக்க விளைவுகளையும் ஏற்படுத்தவில்லை. இருப்பினும் மருத்துவரிடம் கலந்தாலோசித்து முடிவெடுப்பதே சிறந்தது.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"