அதிபரின் வருகைக்கு அரை நிர்வாணமாக எதிர்ப்பு தெரிவித்த பெண்கள்!!


பிரான்சிற்கு வருகை தந்த துளிசியாவின் ஜனாதிபதி Moncef Marzouki பரிஸ் வந்திருந்தார். இவருக்கு நாற்றுக்கணக்கான எதிர்ப்பாளர்களும் FEMEN எனப்படும் திறந்த மார்புப் போராட்டப் பெண்கள் மூவரும் பெரும் எதிர்ப்பபைத் தெரிவித்திருந்தனர்.

இவர்கள் கடந்த பெப்ரவரி மாதம் துனிசியாவில் படுகொலை செய்யப்பட்ட மதசார்பற்ற எதிரக்கட்சித் தலைவரான Chokri Belaïd வின் படுகொலைக்கு இவர்கள் நியாயம் கோரினார்கள்.

அரபிய உலக நிறுவனத்தின் (Institut du Monde arabe - IMA) கருத்தரங்கில் துனிசிய ஜனாதிபதி Moncef Marzouki உரையாற்ற வந்த போது மூன்று FEMEN பெண்கள் மேலாடைகள் இன்றித் திறந்த மார்பில் கோசங்களை எழுதியபடி மேடைக்கு 'அமினாவை விடுதலை செய்' «Libérez Amina!» என்று கோசமிட்டபடி பாய்ந்துள்ளனர்.


பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"