மழைக்காலத்தில் செக்ஸ் வைத்துக்கொள்ள விரும்பாத இங்கிலாந்து நாட்டினர்


இங்கிலாந்து நாட்டினர் மழைக்காலத்தில் செக்ஸ் வைத்துக்கொள்ள விரும்புவதில்லை என்று அங்கு எடுக்கப்பட்ட சர்வே ஒன்றில் தெரியவந்துள்ளது. இணையதளம் ஒன்று நடத்திய வாக்கெடுப்பில் மழைக்காலத்தில் ரொமான்ஸ் செய்ய விரும்புவதில்லை என்று கூறியுள்ளனர்.

மிஸ் டிராவல் டாட் காம் என்ற இணையதளம் இங்கிலாந்தில் உள்ள 20000 பேரிடம் வாக்கெடுப்பு ஒன்றினை நடத்தியது. இதில் பங்கேற்ற ஆண்களும், பெண்களும் மழைக்காலத்தில் உறவு வைத்துக்கொள்ள விரும்புவதில்லை என்று கூறியுள்ளனர்.

குளிர்காலத்தில் எல்லோரும் இழுத்துப் போர்த்திக்கொண்டு உடைகளை முழுவதுமாக மூடி இதமாகத் தூங்குவதைத்தான் விரும்புகின்றனராம். அப்போது செக்ஸ் மூடு கிளம்புவதில்லையாம். அதேசமயம், கோடைகாலத்தில் வியர்வை கசகசப்பை போக்க மிகவும் ரிலாக்ஸ் ஆகவும், சில சமயம் பிகினி ஆடைகளை அணிந்து கொண்டும் உறங்குவார்கள். அந்த மாதிரி நேரத்தில்தான் தங்களுக்கு ஆசை கிளர்ந்தெழும் என்றும் கூறியுள்ளனர்.

இந்த வாக்கெடுப்பின் போது மற்றுமொரு சுவாரஸ்யமான தகவலும் தெரியவந்துள்ளது. பெரும்பாலான ஆண்கள் தங்களின் காதலிக்கோ, மனைவிக்கோ பிப்டி ஷேட்ஸ் ஆப் க்ரே நாவலை வாங்கி பரிசளித்துள்ளனராம். பெரும்பாலான ஆண்கள் தங்களின் கேர்ள் ப்ரண்டுகளிடம் கடன் வாங்கி அந்த புத்தகத்தை படித்துள்ளனராம்.

மேலும் இந்த வாக்கெடுப்பில் பங்கேற்ற தம்பதியர் பெரும்பாலோனார் தங்களின் முதலிரவு நாளில் இரண்டு முறை உறவில் ஈடுபட்டதாக ஒத்துக்கொண்டுள்ளனர். விடுமுறை காலங்களில் பெரும்பாலோனோர் சராசரியாக வாரத்திற்கு 5 அல்லது 6 முறை செக்ஸ் வைத்துக்கொள்வதாக தெரிவித்துள்ளனர்

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"