திருமண ஆசையில் மணக்கோலத்தில் வந்த காதலியை கற்பழித்துவிட்டு காதலன் ஓட்டம்!


திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நத்தம் சிறுகுடி கிராமத்தைச் சேர்வர் பழனியாண்டி(27). அவரும் அதே பகுதியைச் சேர்ந்த தனலெட்சுமி(25) என்பவரும் ஒரு ஆண்டு காலமாக காதலித்து வந்தனர். இந்த காதலுக்கு 2 பேரின் வீட்டிலும் எதிர்ப்பு கிளம்பியது. இருப்பினும் அவர்கள் காதலித்து வந்தனர்.

பழனியாண்டி தனலெட்சுமியிடம் உன்னைத் தான் திருமணம் செய்வேன் என்று அவ்வப்போது தெரிவித்து வந்துள்ளார். இதனால் தனலெட்சுமி தனது காதலனிடம் என்னை எப்போது திருமணம் செய்து கொள்வீர்கள் என்று கேட்டு வந்துள்ளார். சம்பவத்தன்று பழனியாண்டி தனலெட்சுமிக்கு போன் செய்து இன்று நாம் திருமணம் செய்து கொள்வோம், உடனே கிளம்பி வா என்று கூறியுள்ளார்.

இதைக் கேட்டு குஷியான தனலெட்சுமி பட்டுப்புடவை கட்டி மணக்கோலத்தில் சென்று காதலனை பார்த்துள்ளார். இருவரும் நீண்டநேரம் மனம்விட்டு பேசியுள்ளனர். அதன் பிறகு பழனியாண்டி தனலெட்சுமியுடன் உல்லாசமாக இருந்துவிட்டு ஓடிவிட்டார். இதையடுத்து தனலெட்சுமி வடமதுரை போலீசில் பழனியாண்டி தனக்கு திருமண ஆசை காட்டி கற்பழித்துவிட்டதாக புகார் கொடுத்தார்.

அவரது புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் தலைமறைவான பழனியாண்டியை வலை வீசி தேடி வருகின்றனர்.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"