குழந்தை பிறக்கத் தேவையான விந்தணு வீரியத்தின் அளவு



ஒரு பெண்ணைத் தாயாக்க (அதாவது தன் மனைவியை தாயாக்க) வேண்டுமானால் ஆணுக்கு கீழ்க்கண்ட தகுதிகள் இருக்க வேண்டும் என்கிறது விஞ்ஞானம்.

1. உடலுறவின்போது வெளிப்படும் விந்தின் அளவு குறைந்தது 2 மில்லி லிட்டர் இருக்க வேண்டும்.

2. விந்தில் உயிரணுக்களின் எண்ணிக்கை 20 மில்லியன் இருக்க வேண்டும்.

3. 70 சதவீதத்திற்கு மேலான உயிரணுக்கள் உயிர்த்தன்மையுடன் இருக்க வேண்டும்.

4. 30 சதவீதத்திற்கு மேலான அணுக்கள் உருச்சிதைவில்லாமல் இருக்க வேண்டும்.

5. விரைவாக ஊர்ந்து செல்லும் அணுக்களின் எண்ணிக்கை 25 சதவீதத்துக்கு மேலாக இருக்க வேண்டும்.


புரதச் சத்து, வைட்டமின் ஈ மற்றும் பி காம்ப்ளக்ஸ் குறைவான உணவுகளை உண்டு வரும் ஆண்களுக்கு விந்தணுக்கள் குறைவதற்கு வாய்ப்புகள் அதிகம். அதேபோல் விந்தணு வீரியத்தை குறைக்கும் மது, சிகரெட் புகைக்கும் ஆண்களுக்கும் ஆண்மைக் குறைவு ஏற்பட வாய்ப்புண்டு. ஏனெனில் சிகரெட்டில் இருக்கும் நிகோட்டின், உயிரணுக்களின் எண்ணிக்கையைக் குறைப்பதோடு, விந்தணுக்கள் ஊர்ந்து செல்லும் தன்மையையும் பாதிக்கிறது. எனவே அப்பா ஆகும் ஆசையுள்ள ஆண்கள் மது, சிகரெட்டைத் தவிர்ப்பது நல்லது.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"