அலுவலங்கள் மற்றும் கணினி மையங்களில் கோப்புகளை உருவாக்க பெரும்பாலும் தற்போதைய காலகட்டத்தில் மைக்ரோசாப்ட் ஆப்பிஸ் தொகுப்பான வேர்ட் கொண்டோ உருவாக்கப்படுகிறது. ஆப்பிஸ் தொகுப்பை கொண்டு உருவாக்கப்படும் கோப்புகள் அனைத்தையும் எழுத்து வடிவில் மட்டுமே இருக்கும்.
வேர்ட் தொகுப்பை பயன்படுத்தி உருவாக்கப்படும் கோப்புகள் மிகச்சிறியதாகவும். அளவில் பல பக்கங்களை உள்ளட்டக்கியதாகவும், அதிகமான பக்கங்களை கொண்ட டாக்குமெண்ட்களை எளிதில் படித்துவிட முடியாது. இதனால் காலம் தாமதம் மட்டுமே ஆகும். இதற்கு பதிலாக எழுத்து வடிவில் உருவாக்கப்படும் கோப்புகளை ஒலி வடிவில்மாற்றம் செய்ய இலவச மென்பொருள் வழிவகை செய்கிறது.
மென்பொருளை சுட்டியில் குறிப்பிட்ட தளத்தில் இருந்து பதிவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவும். இந்த மென்பொருளை கணினியில் நிறுவ வேண்டுமெனில் டாட்நெட் ப்ரேம்வோர்க் அன்மைய பதிப்பு கணினியில் நிறுவியிருக்க வேண்டும். இல்லையெனில் டாட்நெட் ப்ரேம் வோர்க் மென்பொருள் நீங்கள் பதிவிறக்கிய கோப்பில் இருக்கும் அதை கணினியில் நிறுவிக்கொள்ளவும்.
பின் AudioDocs மென்பொருளை முழுமையாக ணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும். MS Word to AudioDoc என்னும் பொத்தானை அழுத்தவும். அடுத்ததாக தோன்றும் விண்டோவில் வேர்ட் கோப்பினை தேர்வு செய்து பின் ஒலியின் அளவு மற்றும் எவ்வளவு நேர இடைவெளியில் வார்த்தைகளை உச்சரிக்க வேண்டும் என்பதை தெரிவு செய்து விட்டு பின் Create AudioDoc என்னும் பொத்தானை அழுத்தவும். பின் சில நிமிடங்களில் ஆடியோ பைல் உருவாக்கப்பட்டுவிடும். உருவாக்கப்படும் ஆடியோ பைல் பார்மெட்டானது .wav பார்மெட்டில் இருக்கும். கன்வெர்ட் செய்யப்பட்ட ஆடியோ கோப்பினை வழக்கம்போல் பயன்படுத்திக்கொள்ள முடியும்.
மென்பொருளை தரவிறக்க கீழே சொடுக்குங்க