கம்ப்யூட்டர் வாங்க கவனம் தேவை!


கம்ப்யூட்டர் கொஞ்சம் கவனமாக வாங்க வேண்டிய விஷயம். ஒரே மாதிரி செயல் திறன் கொண்ட பல கம்ப்யூட்டர்களை பார்த்தபின் முடிவெடுக்க வேண்டும். எல்லா அப்டேஷன் சமாசாரங்களையும் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். மலிவு விலையில் 'ரேம்' போன்றவை கிடைத்தால், அப்கிரேட் செய்து கொள்ளலாம்.

நீங்கள் மனதில் கொள்ள வேண்டிய முதல் அயிட்டம், ரேம். அதிக திறன் கொண்ட ரேம், உங்கள் கம்ப்யூட்டரின் செயல்பாட்டை அதிகரிக்கும். கூடவே, ஆபரேடிங் சிஸ்டம் உங்கள் கம்ப்யூட்டரில் சக்திக்குத் தக்கதாக இருக்க வேண்டியது அவசியம்.

உங்கள் தேவையை அந்த கம்ப்யூட்டர் பூர்த்தி செய்யாது எனத் தெரிந்தால்... அதை வாங்காதீர்கள். ஒரு கம்ப்யூட்டரை வாங்குவது என்று முடிவெடுத்துவிட்டால்... கொஞ்ச நேரம் அதைத் தனியாகச் சோதித்துப் பாருங்கள். சேல்ஸ்மேன் அருகில் இருக்கும்போது சிலவற்றை சரியாகச் சோதிக்க முடியாமல் போகலாம்.

கம்ப்யூட்டருடன் என்னென்ன இணை பொருட்கள் கிடைக்கின்றன என்பதைக் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். தேவையான பொருட்கள் அனைத்தும் இல்லாவிட்டால், தைரியமாகக் கேட்டு வாங்குங்கள்.

கம்ப்யூட்டரின் வாரண்டி, கியாரண்டி, ரிட்டர்ன் போன்றவவை ரொம்ப முக்கியம். குறிப்பாக முக்கியமான பாகங்கள் பழுதானால் மாற்றித் தரும் கியாரண்டி அவசியம். அந்தக் கம்ப்யூட்டருக்கான சர்வீஸ் சென்டர்கள் உங்களுக்கு அருகில் இருக்கிறதா என்பதைக் கவனியுங்கள். எந்தெந்த நிறுவனங்கள், சிறப்பான சேவை தருகின்றன என்பதையும் விசாரித்து அறியுங்கள்.

இரண்டு பிராண்ட் கம்ப்யூட்டர்கள் ஒரேபோல இருந்தும், பயங்கர விலை வித்தியாசம் இருந்தால் நன்றாகக் கவனித்து வாங்கவும். புராஸசர், மெமரி, பிராண்ட் போன்றவை விலை வித்தியாசத்துக்குக் காரணமாக இருக்கலாம். அவையெல்லாம் திருப்தியாக இருக்கும்பட்சத்தில், விலை அதிகம் என்றாலும்கூட வாங்கலாம்.

பத்திரிகை விமர்சனங்கள், தயாரிப்பாளர் விமர்சனங்கள், பயன்பாட்டாளர் விமர்சனங்கள் மூன்றும் வேறு வேறு விதங்களில் கம்ப்யூட்டரை அலசும். எனவே, ஒவ்வொரு பிராண்ட்டுக்கும் இந்த மூன்று விதமான விமர்சனங்களையும் படித்துவிட்டு முடிவெடுங்கள்.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"