மயில் பாலியல் கொடுமைக்குள்ளாக்கி கொலை


அமெரிக்காவில் ஒரு நூதனப் புகார் கிளம்பியுள்ளது. அதாவது இல்லினாய்ஸைச் சேர்ந்த ஒருவர் மயில் ஒன்றை கற்பழித்து விட்டதாக போலீஸில் புகார் பதிவாகியுள்ளது. அந்த நபரின் பெயர் டேவிட் பெக்மேன். 64 வயதாகிறது.

இவர் டுபேஜ் கவுன்டி என்ற கிராமத்தில் வசித்து வருகிறார். இவர்தான் மயிலைக் கற்பழித்து அது சாகக் காரணமானவர் என்று புகார் பதிவாகியுள்ளது. அந்த மயிலின் பெயர் பில் என்பதாகும். இது பெக்மேன் வீட்டு வளாகத்தில் செத்துக் கிடந்தது. இவர்தான் அந்த மயிலை வளர்த்து வந்தார்.

அந்த மயிலைத்தான் பாலியல் கொடுமைக்குள்ளாக்கி அது சாகக் காரணமாகி விட்டார் என்று போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதுதவிர மேலும் பல வழக்குகளும் பெக்மேன் மீது கோர்ட்டில் போலீஸார் பதிவு செய்துள்ளனர். தற்போது இந்த வழக்கில் போலீஸார் அவரைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"