சிறப்பான கூகிள் தேடலுக்கான வழிகள்


கூகுள் என்றால் அது வெறும் தகவலை மட்டும் தேடித் தரும் இயந்திரம் என்று நினைக்கிறோம். ஆனால் அது நாம் கேட்கும் அனைத்து கேள்விகளுக்கும் பதில் கூறும், ஒரு மேதை போல. அவ்வாறு நீங்கள் கேள்விகள் கேட்க ஒரு சில முறைகள் இருக்கிறது அதனைப் பற்றி இங்கு பார்ப்போம்.

முதலில் ஓர் இடத்திற்கான பருவநிலையை எப்படி கண்டறிவது?
இதற்கு நீங்கள் கூகளில் தேடலில் "weather trichy" என்று தட்டச்ச வேண்டும். "trichy" என்ற இடத்தில் நீங்கள் காண விரும்பும் இடத்தின் பருவநிலையை குறிக்க வேண்டும்.ஓர் இடத்தை தேட:-
நாம் கூகிளில் சுலபமாக ஓர் இடத்தை தேடிக் கண்டுபிடித்து விடலாம். உதாரணத்திற்கு கூகிளில் "where is kanyakumari" என்று தேடுங்கள் கன்னியாகுமரி எங்கு அமைந்து உள்ளது என்று தெரியும்.நேரத்தை அறிய:-
கூகிளில் எந்த இடத்திற்கு வேண்டுமானாலும் நேரத்தை அறியலாம். உதாரணத்திற்கு "time new york" தட்டச்சினால் நியூ யார்க் நகரத்தின் நேரத்தை அறியலாம்.

மொழி பெயர்த்தல்:-
ஓர் வார்த்தையை ஒரு மொழியில் இருந்தது இன்னொரு மொழியில் மொழி பெயர்க்க இவ்வாறு தட்டச்சவும் "translate home in hindi". இதில் நான் home என்ற ஆங்கில வார்த்தை இந்தி மொழியில் மொழி பெயர்க்க தேடி உள்ளேன். அதனின் முடிவு இவ்வாறு இருக்கும்:-
இதில் நீங்கள் தமிழில் மொழி பெயர்க்க முடியாது. இருப்பினும் இதற்கு என்று சில தளங்கள் இருக்கிறது அங்கு சென்று நீங்கள் ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழி பெயர்த்துக் கொள்ளலாம்.

திரை அரங்குகளின் திரைப்படப் பட்டியலை அறிய:- 
உங்கள் நகரத்தில் திரையிடும் திரைப்படப் பட்டியலை அறிய கூகிளில் movie <உங்கள் நகரத்தின் பெயர்> <உங்களின் நாடு> அதாவது இவ்வாறு தட்டச்ச வேண்டும் "movie madurai india" அதனின் முடிவுகள் கீழே உள்ள படத்தை போன்று இருக்கும்


விவரங்கள் அறிய:-
நீங்கள் ஓர் வார்த்தைக்கான விவரங்கள் அறிய கூகுள் மிக மிக உதவியாக இருக்கும். உதாரணத்திற்கு கூகிளில் "define: physics" என்று தேடினால் பெளதிகம் பற்றிய விவரங்கள் அனைத்தும் வரும். இதில் "define :" என்ற வார்த்தை இருந்தால் மட்டுமே விவரங்களை அறிய முடியும்.


பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"