ஓரின சேர்க்கை தம்பதிகளுக்கு சலுகைகள் வழங்க அரசு முடிவு


அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் நிர்வாகம் தனது ராணுவத்தில் பணிபுரியும் ஓரின சேர்க்கை தம்பதிகளுக்கு பிற ராணுவ வீரர்களுக்கு வழங்கும் அனைத்து சலுகைகளையும் வழங்குவதற்கு முடிவு செய்துள்ளது. ஆகஸ்டு மாத இறுதியில் இதற்கான அறிவிப்பை வெளியிடுகிறது.

இதற்கு முன்பு அமெரிக்க ராணுவத்தில் ஓரின சேர்க்கையாளர்கள் திருமணம் செய்து கொள்ளாமல் அரசு சலுகைகளை பெற்று வந்தனர். தற்போது இந்த சலுகைகளை நிறுத்த பென்டகன் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. திருமணம் செய்து கொள்ளாமல் ஓரின சேர்க்கை யாளர்கள் சேர்ந்து வாழ்ந்தால் அவர்களுக்கு சலுகைகள் வழங்க முடியாது என்று அறிவித்தது.

ஓரின சேர்க்கையாளர்கள் சட்ட ரீதியாக திருமணம் செய்து கொண்டால் அவர்களுக்கு அனைத்து சலுகைகளும் கிடைக்கும். இதற்கான அனுமதியை இந்த வார இறுதியில் ராணுவ அமைச்சகம் வெளியிடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இதில் ஓரின சேர்க்கை தம்பதிக்கு குடியிருக்க வீடு, மருத்துவ காப்பீடு உள்ளிட்ட அனைத்தும் வழங்கப்படும். மேலும் மற்ற தம்பதிக்கு வழங்கப்படுவதைப் போலவே இவர்களுக்கும் 10 நாட்கள் ஹனிமூன் விடுமுறைகளும் உண்டு என்று அந்த அறிவிப்பின் பட்டியலில் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

ராணுவத்தில் திருமணம் செய்து கொண்ட ஓரின சேர்க்கை தம்பதிகளுக்கும் சலுகைகள் நீட்டிக்கப்பட வேண்டும் என்று சமீபத்தில் அமெரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த தீர்ப்பையொட்டி புதிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக ராணுவ செயலாளர் சக் ஹெகல் தெரிவித்தார். இதன் மூலம் சேர்ந்து வாழும் ஓரின சேர்க்கையாளர்கள் முறைப்படி திருமணம் செய்து கொண்டு அதனை சட்ட ரீதியாக பதிவு செய்து கொள்ள வாய்ப்பு ஏற்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"