சூ...மந்திரக்காளி! மந்திரவாத கலை!!


மாந்திரீக தர்மப்படி அறமுறையாக செய்தால் உன் வாழ்க்கை நிச்சயம் வளமாக இருக்கும். மேலும் ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் இரண்டும் இல்லாமல் எந்த ஆற்றலும் சாத்தியம் இல்லை என்பது மாந்திரீகத்தின் கருப்பொருள்.

மாந்திரீகம் என்றாலே பெரும்பாலும் மானுடவியலில் தீங்கு விளைவிக்கக் கூடியது மற்றும் கொண்டவனையே அழித்துவிடும் முரட்டுத்தனமான, கொடூரமான, சதி செயல் செய்யக் கூடியது என பரந்து பரவிவிட்டது. ஆனால் இது புத்துயிர் கொடுக்கும் ஒரு ஆன்மீகப் பயிற்சியாகும். மாந்திரீகம் என்பது ஒரு வாள் போன்ற ஆயுதம். இதை ஆடு மேய்ப்பவன் கையில் இருந்தால் இலை கொப்புகளை வெட்டி ஆடுகளின் பசியைத் தீர்த்து மகிழ்வான். அதே ஒரு கொலை காரனிடம் இருந்தால் எதிரியின் தலையை வெட்டி மகிழ்வான். என்வே இதை வைத்திருப்பவன் குணத்தைப் பொருத்தது. மேலும் மாந்திரீகத்தில் அனைத்தும் சாத்தான் செய்கிறது என்பதும் முற்றிலும் உண்மை இல்லை. ஏனென்றால், சாத்தான் நம்பிக்கை இல்லாத மந்திரவாதிகளும் இருக்கிறார்கள்.

மாந்திரீக நிவாரணம்:
காலகாலமாக ஒரு பெரிய அளவில் மக்களுக்கு நல்லது செய்யும் முயற்சியாக சமய மரபில் பலர் நமது எண்ணங்களை கட்டுப்படுத்த உதவியாக மந்தரங்களை உருவாக்கியுள்ளனர். இது ஒரு மனத்திரனின் அமானுஸ்ய ஆற்றல் வகையான, மிகவும் பழமையான மற்றும் பொதுவான ஒன்றாகும். எனவே மாந்திரீகம் மனம் சார்ந்த ஆய்வின் பயன்பாடாக உள்ளது. இதில் மனப்பயிற்சி, குறியீடுகள்(மந்தரம், யந்தரம், தியானம்) பயன்படுத்தப் படுகிறது. இதை கையாளுபவர்களை சாத்தான் வாதிகள், பிசாசு வழிபாடு அல்லது கருப்புகளின் துணையில்(கருப்பு வித்தை மிகவும் ஆபத்தானது) மந்திரிப்பவர்கள் என்ற பொருளில் மக்கள் பெரும்பாலும் கூறுகின்றனர். இது வெறும் தவறான தகவல். இது ஒரு மனத்திரன் ஆற்றல் கலையாகும்.

மாந்திரீகத்தில் என்ன செய்ய முடியும்?
மாய மாந்திரீகத்தை பயன் படுத்தி மருந்துகள் இல்லாமல் நினைவாற்றலை உயர்த்தி புதிய அனுபவங்களைப் பெற முடியும். மனம் சார்ந்த நிகழ்வுகளை மற்றும் பிறறையோ அல்லது ஒரு பொருளையோ தன்னிச்சைப்படி கட்டுப்படுத்தி செயல் படுத்த முடியும். சிறந்த சுகாதாரம் நல்ல அதிஸ்டத்தைக் கொண்டுவர முடியும். தன்னையும் தன் சூழலையும் மாற்றி வாழ்க்கையை நன்றாக மற்றும் சீராக அமைத்துக் கொள்ள முடியும். கெட்ட பழக்கங்களைக் கட்டுப்படுத்தி புதிய நோக்கங்களை உருவாக்க மற்றும் ஆளுமை பண்புகளை வளர்க்க முடியும். இறந்த காலம், நிகழ்காலம், எதிர் காலத்தைப் பற்றி அறிய மற்றும் மற்றவருடைய அனுமதியுடன் அல்லது அனுமதியின்றி அவர்கள் மீது தனது செல்வாக்கைப் பயன்படுத்தி அவர்களுடைய நோய்களைக் குணப்படுத்த முடியும். எனவே ஆக்கல், காத்தல், அழித்தல் போன்ற நுட்பங்களை கொண்டுள்ள மாந்திரீகம் ஒரு மகத்தான சக்தி வாய்ந்ததாகும். இதை குறைத்து மதிப்பிட்டு விட முடியாது.

மாந்திரீகத்தின் பக்க விளைவுகள்:
தீயதுக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்து, முடிவை பொருட்படுத்தாமல் மாய செயலில் விரும்பியதை செய்கிற போது அதனால் பக்க விளைவுகள் உருவாக வாய்ப்பு உள்ளது. இவைகள் பலன் தரும் என்பதால் இது போன்ற பக்க விளைவுகளை ஏற்க முடியுமா? தங்க ஊசி என்பதால் வயிற்றில் குத்திக் கொள்ள முடியுமா? எனவே ஆக்கப்பூர்வமான மாந்திரீகத்தில் எந்த பிரச்சினையும் இல்லை. எனினும் தீங்கு விளைவிக்கும் எந்த மந்திர வித்தைகளானாலும் அது பக்க விளைவுகளை உருவாக்கக் கூடும் மற்றும் மிகவும் ஆபத்தானது. இதில் 64 கலை வடிவங்கள் உள்ளன. இந்த மாந்திரீகத்தை பயன்படுத்தி மக்களை ஏமாற்றவோ அல்லது மோசடிகள் செய்தாலோ உனக்கு ஐயோ கேடு சம்பவிக்கும்.

மூலிகைகள்
இந்த மூலிகைகள் புதர்களாகவும் செடி கொடிகளாகவும் மரங்கள் வடிவாகவும் மலைகளிலும் குண்றுகளிலும் காடுகளிலும் வளர்ந்து வருகிறது. இதைப் பற்றி சித்தர்களும் மாந்திரீக வாதிகளும் சில முன்னேரியவர்களும் அறிந்தவர்களாக இருக்கிறார்கள். இந்த மூலிகைகள் மருத்துவம் மற்றும் மாய குணங்களை கொண்டுள்ளன. சில மூலிகைகளை நாம் தொடும் போது தற்காலிகமாக நம் நினைவாற்றலை இழந்து சுற்றி அலைய நேரிடுகிறது. சில மூலிகையை பயன்படுத்தி மற்றவர்களை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வர முடியும். மேலும் எதிரிகளை நண்பர்களாக்கிக் கொள்ளவும், அழிக்கவும், பிரிக்கவும், குடும்ப சமாதானத்தை உருவாக்கவும், காதல் விக்ஷயங்களில் பிரியாதிருக்கவும், நினைவாற்றலை வளப்படுத்தவும், நாம் விரும்பியவர் தன்னைச் சுற்றி சுற்றி வரச் செயவும், வாஸ்த்துகளை சரி செயவும், பில்லி சூனிய, துஸ்ட ஆவிகளை விலக்கவும் முடியும். மற்றவர்களுக்கு ரூபங்களை மாற்றி காட்டும் மாய குணமும் கொண்டுள்ளது.


பில்லி:-
ஒருவரை உடல் ரீதியிலும் உள்ள ரீதியிலும் செயல் ரீதியிலும் ஈர்த்து மந்திரவாதி தனது கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்து தனது விருப்பப்படி செயலாற்ற வைப்பதே பில்லி ஆகும்.

சூனியம்:-
சூனியம் என்றாலே வெறுமை என்று அர்த்தம்.அதாவது ஒருவனை உடல் ரீதியிலும், உள்ள ரீதியிலும், செயல்பாட்டிலும், பொருளாதாரத்திலும் ஒன்றும் இல்லாமல் ஆக்குவதற்கு சூனியம் என்று பெயர். சூனியத்தின் மூலம் எவருக்கும் எத்தகைய கெடுதியையும் செய்துவிடலாம், எவரை வேண்டுமானாலும் அழித்து விடலாம், கை, கால்களை முடக்கி விடலாம், சம்மந்தப்பட்டவருக்கு தெரியாமல் அவர் வயிற்றில் மருந்தை செலுத்தி விடலாம், கருவில் வளரும் குழந்தையை கொன்று விடலாம், கர்ப்பத்தை கலைத்து விடலாம், நோய் பிடிக்க செய்து விடலாம்... இப்படியே ஏராளமான கெடுதிகளை சூனியத்தின் மூலம் செய்து விட முடியும்.

ஏவல்:-
ஏவல் என்பதற்கு கட்டளை இடுதல் என்று அர்த்தமாகும். தனது விருப்பத்திற்கு ஏற்ப செயல்படும்படி கட்டளை இடுவதற்கு ஏவல் என்று பெயர்.

செய்வினை:-
தனது சொந்த வினையின்படி செயலாற்றும் ஒருவனை மாந்திரீக முறையில் பலவழிகளில் திசைதிருப்பி கேட்டு, அழிந்து போக வைப்பதாகும். இந்த செய்வினை பொருளாதார ரீதியிலும், உடல் ஆரோக்கிய ரீதியிலும் கஷ்டங்கள் கொடுப்பதாகும்.

வைப்பு:-
மாந்த்ரீக ரீதியிலோ, மருத்துவ ரீதியிலோ, ஒரு பொருளைக் கொடுத்து உன்ன வைத்தோ உடலில் தடவியோ, அவர்களுக்கு உடல் ரீதியிலும்,உள்ள ரீதியிலும்,பொருளாதார ரீதியிலும் கெடுதல் செய்வதையே வைப்பு என்கிறோம்.

ஒருவருக்கு பில்லி, சூன்யம், வைப்பு, செய்வினை, வைக்க வேண்டும் என்றால் அவருடைய ஜதகமோ புகைப்படமோ, வியர்வை நனைந்த அல்லது ரத்தம் நனைந்த துணியோ, தலை முடி, காலடி மண்ணோ, விந்தணு பட்ட துணியோ தேவைப்படும்.


ஆவி உலகம்:-
ஆவி என்று ஒன்று உண்டா? என்ற கேள்விக்கு இருவிதமான கருத்துக்கள் உலவுகின்றன. மனோதத்துவ டாக்டர்கள் ஆவி ஒன்று கிடையாது, அது மனிதன் பிரித்தறியும் செயல் என்று எண்ணுகின்றனர். ஆனால் அறிவியலின் போலோ கிராம் என்ற ஒரு பகுதி ஆவி உண்டு என்று சோதனைகள் மூலம் நிருபித்து உள்ளனர்.

ஆவியை ஒரு அனுமான உடல் என்று கூறலாம். இவைகளை பார்வை மூலமாகவும் உணர முடியும் என்று கூறுகின்றனர். ஒரு பேயால் பாதிக்கப்பட்டவர்கள் உடல் நிலையிலும், மன நிலையிலும் பலவீனம் அடைகின்றனர். அவர்கள் பயம், கோவம், ஆங்காரமான பேச்சுக்கள் அல்லது நலிந்த பேச்சுக்கள் உடையவர்களாக இருப்பார். அவர்கள் ஆளுமை தன்மை குறைந்து மன அழுத்தத்துடன் எதிர்மறையான எண்ணங்களுடன் இருப்பார்.

இத்தகைய பேய்கள் இரவு நேரங்களில், அம்மாவாசை, முழுநிலவு நாள், அருங்காட்சியகம், இடிந்தவீடு, ஒழுங்காக பராமரிக்கப்படாத வீடுகளில் பொதுவாக வசிக்கும் தன்மை உடையது. பொதுவாக இரவு 12-மணிமுதல் காலை மூன்று மணிவரை பேய்களுக்கு ஒரு பிடித்தமான நேரம் என்று எண்ணப்படுகிறது. பொதுவாக பேய்பிடித்தவர்கள் அதிக பசியை வெளிப்படுத்துவார்கள். உணவில் அசைவ உணவுகள், மதுபானங்கள், போதைபோருள்கள் ஆகியவற்றில் நோட்டம் அதிகமாக இருக்கும். சில பேய்கள் இடுகாடு, சுடுகாடு, பாழடைந்த கிணறுகள், போர்கள் நடந்து பல உயிர்கள் பலியான இடங்களில் வசிப்பதாகவும் எண்ணுவர்.

இவ்வாறு பேயால் பாதிக்கப்பட்டவர்கள் எதிர்மறையான எண்ணங்களுடன் எதிர்மறையான செயல்கள் செய்வர். சில நேரங்களில் வன்முறையில் ஈடுபடுவர். சிலர் அடிமைத்தன உணர்வுடனோ அல்லது மற்றவர்களை அதிகாரம் பண்ணும் தன்மையும் இருக்கும். அவைகளுக்கு ஆண், பெண், என்ற பாலினம் உண்டு. இத்தகைய பேய்களை பூமி, நெருப்பு, காற்று, நீர், ஆகாயம் ஆகிய பஞ்சபூதங்கள் ஒன்றும் செய்வதில்லை என்ற கருத்து உள்ளது. பேய்பிடித்தவர்கள் மனநிலையாலும், உடல்நிலையாலும், பாதிக்கப்பட்டவர்களாக இருப்பார்.

அகால மரணம் அடைந்தவர்கள் ஆவியாக மாறி தங்களின் விருப்பம் நிறைவேறும்வரை ஆவியாகத் திரிகிறார்கள் என்ற ஒரு கருத்துக் கிராமப் புறங்களில் இருந்துவருகிறது.ஆவிகள் தொந்தரவால் பூஜை,மந்திரம் எனச் செய்து அவற்றை மண்கலயங்களில் அடக்கி குளத்திற்குள் புதைத்துவைத்து விடுவதாகவும் பின்னொருநாளில் குளத்து நீர் வற்றினால் மனையடியாக நிலத்தை உபயோகிக்கும் போது அந்த ஆவி திரும்பவும் வெளிவர வாய்ப்புள்ளது என்றேல்லாம் கருத்து நிலவி வருகிறது.

ஆவிகளுடன் பேசுதல் என்ற வழக்கம் உலகளவில் உள்ளது. ஆவிகளுடன் பேசுதல் என்ற உடன் நமக்கு நினைவு வருவது ஆவி அமுதாவும், நடிகை கனகாவும் தான். வெளி நாடுகளில் ஆவிகளுடன் பேச உபயோகிக்கப்படும் பலகைக்கு ஓஜா என்று பெயர். வெளி நாடுகளில் இத்தகைய பலகைகள் செய்யும் தொழிற்சாலைகள் பல உள்ளன. அவ்வாறு ஆவிகளுடன் பேசும் சூனியக்காரர்களும் அதிகம் உள்ளனர். இவ்வாறு ஆவிகளுடன் பேசுவதற்கு என்று ஒரு தனிப்பட்ட அறையை உருவாக்குகின்றனர். அங்கு உள்ள மேஜை, சுற்றி உள்ள படங்கள், மற்றும் குறைந்த ஒளி, ஆகியவைகள் பயம் கலந்த பக்தியை உருவாக்குவதாக உள்ளன.

அங்கு வரும் வாடிக்கையாளர்கள் கேட்கும் கேள்விகளுக்கு ஓஜா பலகையை வைத்து அதன் மீது இருதய வடிவில் உள்ள துண்டுப் பலகையை நகர்த்தி பதில் கூறுகின்றனர். ஆரம்ப காலங்களில் (1700) இது ஒரு பொழுது போக்கு நிறைந்த விளையாட்டாக கருதினர். பின்னர் இந்தக் கலை பிரபலம் ஆனது. அரசியல்வாதிகள் கூட இத்தகைய ஆவி பேச்சுக்களின் மீது நம்பிக்கை கொண்டனர். ஓஜா பலகையை வைத்து பலன் கூறுபவர்கள் ஒரு அமானுட சக்தியைக் கொண்டவராகவோ அல்லது ஆவிகளின் ஆதிக்கம் கொண்டவராகவோ எண்ணினர்.

சீனாவில் 1100-ஆம் ஆண்டு முதற்கொண்டு இவ்வாறு ஆவிகளுடன் பேசுவதும், ஆவிகள் மூலமாக கட்டுரைகள் எழுதி வாங்குவதும் ஒரு கலையாக வைத்துள்ளனர். இத்தகைய ஆவிகளுடன் பேசுவது உலகம் முழுவதும் முக்கியமாக கிரிஷ், ரோம், மத்திய ஐரோப்பா, பண்டைய இந்தியா முதலிய நாடுகளில் இருந்ததாகத் தெரிகிறது. இந்த ஓஜா பலகைக்கு புல்லட் என்ற வேறு பெயரும் உண்டு. இந்த ஓஜா பலகையின் மூலம் ஒருவரின் எதிர்காலம், பொருளாதாரம், மனநிலை மற்றும் அவர்களின் பிரச்சனைகளுக்கு பதில் அளித்தனர்.

இப்பொழுதும் அமெரிக்கா ஐக்கிய நாட்டில் 10-இல் இருந்து 18- வயதுக்கு உட்பட்டவர்கள் குடும்பமாக கூடி ஓஜா பலகையின் மூலம் பேசுவது வழக்கமாக உள்ளது. ஓஜா பலகையில் பேசுபவர்கள் முதலில் தங்களுக்கு உதவும் ஆவியை உடலில் இறங்கியதும் பலகையில் பல்லட்டை நகர்த்தி கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல ஆரம்பிப்பர். இந்தியாவிலும் கோடாங்கி அடிப்பவர்கள் தங்களுடைய தெய்வங்களை வரிந்து அழைத்து வந்தபின் குறி சொல்ல ஆரம்பிப்பர்.

மந்திரவாதி
மந்திரத்தால் வாதம் செய்பவனை மந்திரவாதி என்கின்றோம். ஆங்கிலத்தில் இவர்களுக்கு அக்கல் சயின்டிஸ்டு என்பர். அக்கல் என்பதற்கு மறைபொருளான சக்தியைச் சார்ந்த விஞ்ஞானி என்று அர்த்தம். ஆன்மீகவாதியும், மாந்திரீகவாதியும் பெறும் சக்தி ஒன்று தான். ஆன்மீகவாதி அந்த சக்தியை நல்வழிக்கு உபயோகப்படுத்துகிறான். மந்திரவாதியோ அந்த சக்தியை நன்மைக்கும், தீமைக்கும் உபயோகப்படுத்துகிறான்.

தியானத்துடன் கூடிய மந்திர உச்சாடனத்தால் சக்தியை உருவாக்கி தன்னில் நிலை நிறுத்துகிறான். அல்லது தான் வைத்திருக்கும் எந்திரத்தின் மீதோ சிலையின் மீதோ அல்லது ஒரு பொருளின் மீதோ சக்தியை நிலை நிறுத்துகிறான். அவ்வாறு அதிதீவிர சக்தியை நிலை நிறுத்துவதைத் தான் சித்தி பெறுதல் என்று பெயர். சித்தி பெறாத எந்த காரியமும் மாந்திரீகத்தில் செயல்படாது. இந்த சித்தியைப் பெறுவதற்காக தியானத்துடன் கூடிய ஒருமைப்பாட்டுடன் மந்திர உச்சாடனம் செய்கின்றான்.

பொதுவாக சித்தி அடைந்தவர்கள் பிரணவ யோகியாகத்தான் இருக்கமுடியும். பிரணவ யோகி நன்மை, தீமைக்கு பயப்படுபவனாக இருப்பான். பணத்துக்காக மாந்திரீகத்தை உபயோகப்படுத்தமாட்டான். அவனுக்கு அகரமாகிய ஆண் தத்துவம் தெரியும். உகரமாகிய பெண் தத்துவம் தெரியும். இந்த அகரத்தையும், உகரத்தையும் வைத்து மகரமாகிய செயல்பாடு தத்துவம் தெரியும். மகரமாகிய செயல்பாடு தத்துவத்தைக் கொண்டு விந்து நாதத்தை ஒன்று சேர்த்து பிரணவமாகிய குழந்தையை உருவாக்கத் தெரியும். இதுதான் மாந்திரீகம். இதுதான் சாகாக்கலை. இதுதான் பிரணவயோகம். பிரணவ மை இல்லாதவன் ஒரு காரியத்தையும் சாதிக்க முடியாது.

பிரபஞ்ச இயக்கத்தில் இச்சக்தியைப் பெற்றவர்கள் பிறர்படும் கஷ்டங்களைப் போக்க நேர்மையாகச் செயல்படுபவர்கள். இப்பொழுது வியாபார ரீதியில் மந்திரவாதிகள் உள்ளனர். அவர்கள் பணத்திற்காக ஏதோ செய்வது போல் செய்து பணம் பறித்துள்ளனர். எல்லா சக்தியும் பெற்ற அவர்கள் ஏன் உங்களிடம் பணம் பெற வேண்டும். அவர்களே தங்களுடைய சக்தியை உபயோகித்து பணம் உருவாக்கி கொள்ளலாம் அல்லவா? பெரும்பாலும் பணம் கொடுப்பவர்கள் தங்கள் காரியங்கள் இயற்கையாக செயலாக்கம் வந்துவிட்டால் அந்த மந்திரவாதியைப் புகழ்கின்றனர். தோல்வி அடைந்தவர்களோ அவர்களைத் தட்டிக் கேட்க யோசித்து சென்று விடுகின்றனர். இந்தியச் சட்டம் இத்தகைய ஏமாற்று வேலைகளுக்கு எதிராக செயல்படுகிறது.


மாந்திரீக பூஜை
பொதுவாக மாந்திரீகம் செய்பவர்கள் தங்களுடைய பூஜைக்கு என்று வழிமுறைகள் வகுத்துள்ளனர்.
• மஹா கணபதி தியானம்,
• தஷிணாமூர்த்தி தியானம், (குரு மந்திரம்)
• ஆசன பூஜை,
• பூமி பூஜை,
• தீப பூஜை,
• பூத பூஜை,
• கலச பூஜை,
• சங்கு பூஜை,
• கண்டா பூஜை,
• சகல மந்திர சாப நிவர்த்தி,
• ப்ராணப பிரதிஸ்ட்டா மந்திரம்,
• சகல யந்திரங்களுக்கும் அர்ச்சனை மந்திரம்,
• மந்திர காயத்திரி,
• யந்திர காயத்திரி,
• சகல கருங்கல்லுக்கும் சக்தி அளிக்கும் மந்திரம்,
• பூஜிக்கும் தேவதைகளுக்கும் பந்தந நிவர்த்தி,
• தேவதா வசிய மந்திரம்,
• மந்திர பிரவேசம் முதலியவைகள் வரிசையாக இருக்கும்.

பொதுவாக பூஜையில் உபயோகப்படுத்தும் பொருள்கள்
• பூஜைக்காக எடுத்துக் கொண்ட கரு,
• தூபம், தீபம்,
• நெய்வேத்தியம்,
• கலசம்,
• புஸ்பம்,
• வெற்றிலை பாக்கு, போன்ற பொருள்கள்,
• உட்காரும் ஆசனம்,
• மணி, பஞ்சகாயம்,
• பஞ்சகவ்யம்,
• நீர்,
• தீபத்துக்குரிய குறிக்கப்பட்ட எண்ணெய் போன்றவைகள் ஆகும்.

சமுதாயத்தில் பாதிக்கப்படுபவர்கள்
சமுதாய ரீதியாக, பொருளாதார ரீதியாக, ஏழ்மை நிலையில் உள்ளோர், பெண்கள், ஆதிதிராவிடர், மலைவாழ் இனத்தவர் மற்றும் பின்தங்கிய வகுப்பினர்.

மாந்திரீகவாதி குறித்த அச்சத்திற்குக் காரணங்கள்
 • கலாச்சார நம்பிக்கை
 • சமுதாய நிலை
 • அடக்கப்படுதல் மற்றும் ஒடுக்கப்படுதல்
 • கல்வியறிவின்மை
 • அறியாமை
 • போதிய மருத்துவ வசதியின்மை
 • அரசியல் மற்றும் சமுதாயப்பகை
 • திருமண/தனிப்பட்ட பிரச்சனைகள்
 • உளவியல்
 • அமானுஷ்ய மற்றும் தீய சக்திகள் குறித்த நம்பிக்கை
 • மூட நம்பிக்கை
மாந்திரீகவாதி குறித்த நம்பிக்கைக்குக் காரணங்கள்
 • வறுமை 80 சதவீதம்
 • கல்வியறிவின்மை 80 சதவீதம்
 • அசைவின்மை 90 சதவீதம் (அதாவது முன்னேறிய இடங்களுக்குச் செல்லாது தன் கிராமத்திலேயே இருத்தல்)
 • ஆரோக்கியமின்மை 80 சதவீதம்
 • அடக்கப்படுதலும் ஒடுக்கப்படுதலும் 70 சதவீதம்
 • மூடநம்பிக்கைகள் மற்றும் மந்திரங்களின் மீதுள்ள நம்பிக்கை 95 சதவீதம்

சித்து வேலைகள் செய்வது ஓர் விஞ்ஞானம். அது இன்றைய உலகில் பெரும்பாலும் தொலைந்தேவிட்டது. நாம் இதனை இழந்தது சரியல்ல. உண்மையில் சித்துவேலைகளை நேர்மறையாகவும் பயன்படுத்த முடியும். இந்த முறைகள் ஒருவருடைய சொந்த சக்திநிலைகளையோ அல்லது வெளிப்புற சக்திநிலைகளையோ குறிப்பிட்ட சில விஷயங்களைப் செய்வதற்காக பயன்படுத்திக் கொள்ளும் ஒரு தொழில்நுட்பம்.

பில்லிசூனியம் என்று நீங்கள் அழைக்கும் விஷயங்களும் நல்ல நோக்கங்களுடன்தான் துவங்கின. ஆனால் மக்கள் அவற்றை பலவிதமான வழிகளில் துஷ்பிரயோகம் செய்யத் துவங்கிவிட்டனர். ஆனால் இன்றைய நிலையில் பில்லிசூனியத்தைச் செய்யத் தெரிந்தவர்கள் மிகக் குறைவாக இருப்பதால், அவை குறித்து நீங்கள் கவலைப்படத் தேவையில்லை.

உங்கள் மனதை நீங்கள் சரி செய்துவிட்டால், மற்றவர்களுடைய மந்திர வித்தைகள் – அவை நல்லவையோ அல்லது பில்லிசூனியங்களோ, உங்கள் மேல் அவை தாக்கம் ஏற்படுத்தாது .

சட்ட ஆலோசனைக்குழு உறுப்பினரான முனைவர் பி. இராமையா அவர்கள், மாந்திரீகவாதி குறித்த விசாரணைக் குழுவின் தலைவராக இருந்தார். அவர் சமர்ப்பித்த அறிக்கையில், "மாந்திரீகவாதி, பில்லி, சூனியம் என்றெல்லாம் ஒன்றுமே இல்லை. நீண்டகால மூட நம்பிக்கைகளும், அச்சத்தையும், அழிவையும் தரக்கூடிய வதந்திகளுமே பில்லிசூனியம் குறித்த நம்பிக்கையை, பயத்தை, மக்களிடையே உருவாக்குகிறது என்று தெளிவாகக் கூறியுள்ளார்"

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"