இருபக்க மூளைகளின் செயல்பாட்டையும் இணைக்கும் "மைண்ட்மேப்"


நிஜமாகவே மூளை எப்படி வேலை செய்கிறது; அந்த மூளையிடம் எப்படி வேலை வாங்க வேண்டும் என்று பயன்படுத்துவோர் கையேடு ஒன்று இருந்தால் ? அதுதான் டோனி பூசன் தன் சகோதரனுடன் சேர்ந்து எழுதிய "The Mindmap Book" 

இடது மூளையின் வேலைகள் வார்த்தைகள், தர்க்கம், எண்கள், வரிசை, பகுப்பாய்வு.
வலது மூளையின் வேலைகள் உடல் மொழி, வண்ணம், இசை, உள் உணர்வு, கற்பனை, புலனாய்வு, ஒட்டுமொத்த புரிதல்.

நம் கல்விமுறை முழுக்க முழுக்க இடது மூளை சார்ந்தது என்பது சாதாரணப் பார்வைக்கேத் தெரியும். வார்த்தை சார்ந்த மொழி எழுதுதல், கணக்கு போடுதல், உடைத்துப் பார்க்கும் பகுப்பாய்வு இவைதான் பள்ளி முதல் உயர் கல்வி வரை மைண்ட்மேப் என்று பூசன் கூறும் யுத்தி மிக சுலபமானது.

ஒரு மையக்கருத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதை படமாக வரையப்பாருங்கள். அதன் 360 டிகிரியிலும் கோடுகள் போடுங்கள். ஒவ்வொரு சிந்தனையையும் ஒவ்வொரு கோட்டில் ஒரு மைய வார்த்தையில் வெளிப்படுத்துங்கள். ஒவ்வொரு வார்த்தைக்கும் 360 டிகிரியிலும் கோடுகள் போடுங்கள்.

மீண்டும் இதை போல தொடருங்கள். எங்கு வேண்டுமானாலும் தொடங்கலாம். எங்கு வேண்டுமானாலும் தொடரலாம். எப்படி வேண்டுமாலும் வெளிப்படுத்தலாம். வண்ணம், வடிவம், மொழி, எண்கள், உவமை என எதை வேண்டுமானாலும் சேர்க்கலாம். நீக்கலாம். எடுத்த மைண்ட் மேப்பை பிறகு எப்போது வேண்டுமானாலும் தொடரலாம். முடிக்கலாம்.

உதாரணத்திற்கு, இன்று ஒரு "என்ன செய்ய" லிஸ்ட் போடனும். வரிசையாக போட்டால் 10-ஐத் தாண்டினாலே நிறைய வேலை செய்யும் எண்ணம் வந்துவிடும். நிறுத்தி விடுவோம். மைண்ட் மேப் போடுங்கள்.

Things to do மையக்கருத்து. 360 டிகிரியில் சுற்றிலும் ரெவ்யூ மீட்டிங், கஸ்டமர் மீட்டிங், ஆதார் கார்ட், பாப்பாவின் ஸ்கூல் ஃபீஸ், புது வருஷ பார்ட்டி என்பதெல்லாம் உப கருத்துக்கள்.

மூளையின் நியூராங்களின் கட்டுமானமும், எம்.எல்.எம். என்று சொல்லப்படும் Multi Level Marketing கட்டுமானமும் மைண்ட் மேப்பின் கட்டுமானத்துடன் ஒப்பிட்டு சொல்லலாம்.

ஒரு நவீன ஓவியம் போல முதலில் குழப்பமாகத் தோன்றும் இந்த மன வரைபடம் 100% உங்கள் நினைவில் நிற்கும். தேவைப்பட்ட அத்தனை விஷயங்களையும் ஞாபகம் வைத்துக் கொள்ள உதவும்.

இதன் பயன்கள் எந்த விஷயத்தையும் திறமையாக வேகமாக நோட்ஸ் எடுத்துக் கொள்ளலாம். நல்ல திட்டமிடல் கருவி இது. அருமையான படைப்பாற்றல் முறை இது. கற்றல் கோளாறு உள்ளவர்களை குணப்படுத்தும்.

இயற்கையின் ஒவ்வொரு அங்கமும் (மரம், மின்னல் பூமி இப்படி) மைண்ட் மேப் வடிவிலேயே இருப்பதை புத்தகத்தின் அழகான படங்கள் தெரிவிக்கிறது. வழுப்பான பக்கங்களும், வண்ணப்படங்களும், பெரிய எழுத்துக்களும், ஏராளமான மைண்ட் மேப்களும் இதை ஒரு குழந்தைகள் புத்தகம் போல நம்மை குதூகலமாக படிக்க வைக்கிறது.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"