ஆசிரியையின் ஆபாசப் படங்களை இணையத்தில் வெளியிட்ட மாணவன்


ஆசிரியையின் ஆபாச படங்களை ஐஐடி மாணவன் இணையத்தில் வெளியிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரைச் சார்ந்த மாணவன் குமார் ஜெயின் (வயது 18) என்பவன் கரக்பூரில் அமைந்துள்ள ஐஐடியில் இரண்டாமாண்டு படித்து வருகிறான். இவன் பிலாஸ்பூர் மாவட்டத்தில் பணியாற்றும் ஒரு ஆசிரியையின் ஆபாசப்படங்களை இணையத்தில் பதிவேற்றி வெளியிட்டுள்ளான்.

இது தொடர்பாக, அப்பெண் அளித்த புகாரின் அடிப்படையில் சத்தீஸ்கர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில், அப்படங்கள் கரக்பூர் ஐஐடி வளாகத்திலிருந்து பதிவேற்றம் செய்துள்ளது தெரியவந்தது.

காவல்துறையினர் மேற்கொண்ட தொடர் விசாரணையில் அம்மாணவன் இரண்டு மாதங்களாக கல்லூரிக்கு வரவில்லை எனத் தெரிய வந்தது. குற்றவாளியை தேடும் பணி தீவிரமாக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். ஐஐடி மாணவனின் இச்செயல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"