பெண்ணை நிர்வாணப்படுத்தி சோதனை : கண்காணிப்பு கேமராவில் பதிவான அதிர்ச்சி காட்சி


பெண்ணை நிர்வாணப்படுத்தி அதிகாரிகள் சோதனையிட்டமைக்காக, ரூ 2 கோடி (3,35,000 அமெரிக்க டாலர்) நஷ்ட ஈடு வழங்க அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அமெரிக்காவின் சிகாகோ நகரை சேர்ந்த டேனா கோல்ம்ஸ் (32) என்ற பெண், கடந்தாண்டு மே மாதத்தில் கோல் சிட்டி, இலினோய்ஸ் ஆகிய பகுதிகளுக்கு சுற்றுலா சென்றிருந்தார். அப்போது அவர் மீது சந்தேகம் அடைந்த சட்ட குடியுரிமை அதிகாரிகள் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கோல்ம்ஸ்சை நிர்வாணப்படுத்தி மூன்று அதிகாரிகள் சோதனையிட்டது அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவானது.

இதனால் கடும் மனஉளைச்சலுக்கு ஆளாகிய அவர், தனக்கு நஷ்ட ஈடு வழங்க கோரி சிகாகோ நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.இதனை விசாரித்த நீதிமன்றம் அவருக்கு வழக்கு செலவுகள் உள்பட ரூ 2. கோடி (3,35,000 அமெரிக்க டாலர்) தொகையை நஷ்ட ஈடாக வழங்க உத்தரவிட்டது.


பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"