திருநங்கைகளுக்கு (அலி) எப்படி இருக்கும்….?


சிறுபிராயம் முதற்கொண்டே, அலிகளைப் பற்றி முழுமையாக அறிந்து கொள்ள வேண்டும் … ஆனால், அதற்கான வாய்ப்புகள் இல்லாமல், அவர்களை சமூகம் ஒதுக்கி வைத்து இழிநிலையில் வைத்திருப்பதை மட்டுமே தெரிந்து கொள்கிறோம்.

பால்உறுப்புகளைப் பொறுத்தவரை, ஆணாகவோ, இல்லை பெண்ணாகவோ தனித்தன்மையுடன் இருப்பதில்லை. அதுவே பிரச்சினை…

அலிகளை மூன்று பிரிவினராகப் பிரிக்கலாம்
1. பக்கத்திற்கு ஒன்றாக இரு பால் சுரப்பிகளின் நுண்கூறுகளும் உடையவர்கள்
2. ஒரு விரையண்டகம் ஒரு பக்கத்தில் ஒரு சிரை அல்லது ஒரு அண்டகம் மற்றொரு பக்கத்திலும் அவ்வாறே இருக்கிறது.
3. ஒரு பக்கம் ஒரு விரையும், மற்றொரு பக்கம் அண்டகமும் இருக்கிறது.

புறஇனப் பெருக்க உறுப்புகள் வளர்ச்சி குன்றிக் காணப்படுகிறன்றன. பலருக்கு நீர்த்தாரையின் வெளித்துவாரம் ஆண்குறியின் நுனியில் இல்லாமல் அடிப்பகுதியில் இருக்கிறது. விரைப்பை சரியாக மூடாமல் பெண்குறியின் உதடுகளைப் போன்ற தோற்றத்தைத் தரும். எல்லாருககும் கருப்பை இருக்கும். க்ளைடோரிஸ் சாதாரணமாக இருக்கும்.

யோனி குறைந்த நீளம் உடையதாகவும் உள்ளே மொட்டையாக முடிவதாகவும் இருக்கும். விரைகளைத் தவிர எந்த அக இனப் பெருக்க உறுப்பும் இருக்காது, தோற்றம் உடலில் கொழுப்பு படியும், முறை, மார்பக வளர்ச்சி, முகத்தில் முடி வளர்வது இல்லை, போன்றவைகள் பெண்களைப் போலவே அமையும்.


அலிகள் பிரச்சினை ஒரு வகையில் முழுக்க மருத்துவ மற்றும் குற்றவியல் பிரச்சினை. அலிகள், திருவிழா என்ற பெயரில் சமயப் பூச்சும் கொடுப்பதால், இதற்கு புனிதத்துவம் கிடைத்து விடுகிறது. சட்ட ரீதியாகவும், மருத்துவ ரீதியாகவும் அனுகப்பட்டு முடிவுக்குக் கொண்டுவரப் படவேண்டிய ஒரு மனித சோகம் இங்கு மத ரீதியாக நிரந்தரப்படுத்தப்படுகிறது.

அலிகளை விபசாரத்தில் ஈடுபடுத்திப்பட்டு மிகக் கேவலமாக சுரண்டப்படுகிறார்கள். இதைப்பற்றியெல்லாம் இங்கு யாருக்கும் அக்கறை இல்லை. பொதுமக்களுக்கு அலிகள் ஒரு கேலி அல்லது கேளிக்கைகான பொருள், அறிவாளிகளுக்கு, ஆய்வுக்கு ஒரு நல்ல சப்ஜக்ட்.

சமூகப் பொறுப்பு சிறுதும் இல்லாத நம்முடைய பத்திரிகைகளுக்கு அலிகள் திருவிழா ஒரு மீடியா இவெண்ட். அரசியல்வாதிகளோ இட ஒதுக்கீடு, மூன்றாவது இனம் என்றெல்லாம் பேசி அலிகளின் நியாய அநியாயத்தைக் கேள்விக்குள்ளாக்க யாரும் தயாராக இல்லை.


தீர்வு…
1. விரைத்தறிப்பு முதலிய குற்றங்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்
2. அலிகளின் திருவிழாக்களை தடை செய்ய வேண்டும்?
3. பால்பாகுபாடுக் கோளாறுகளோடு பிறக்கும் குழந்தைகள் அறியாமைக்குப் பலி ஆகிவிடக் கூடாது.
4. அலிசடங்குகளை நிறுத்தி மருத்துவமணைக்கு கூட்டி சென்று சிகிக்சை செய்ய வேண்டும்.
5. உரிய சமயத்தில் சிகிச்சை அளிப்பதன் மூலம் முற்றிலும் இல்லாவிட்டாலும் பெருமளவிற்கு ஆணாகவோ அல்லது பெண்ணாகவோ சரியான வாழ்க்கை வாழ வகை செய்ய முடியும்.
6. இதனால், மூன்றாவது இனம் உருவாக வேண்டிய அவசியம் இல்லை.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"